இடுகைகள்

2007 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இலங்கை இந்துத் தமிழர்களின் திருமணச் சடங்கு

படம்
'திரு' என்பது தெய்வத்தன்மை எனவும், 'மணம்' என்பது இணைதல் எனவும் பொருள்பட்டு, 'திருமணம்' என்பது மேம்மையான தெய்வீகம் வாய்ந்த இணைதல் எனப்படுகின்றது. அதாவது இரு இதயங்கள் இணைவது எனவும் கூறலாம். தமிழர்களின் இந்துத் திருமணம் ஆகம் மரபுச் சடங்குகளுடன் சில சிறப்பு அம்சங்களையும் தழுவி நடைபெறுகின்றன. இச்சடங்குகளை நன்கு படித்த குருக்கள் சமய முறைப்படி அக்கினி பூர்வமாக இறைவன் ஆசியுடன் நடத்தி வைக்கிறார். திருமண நிகழ்வில் முக்கியமான நிகழ்ச்சி சுபவேளையில் தாலி கட்டுதலாகும். இதனை “மாங்கல்யதாரணம்” எனக் கூறுவர். தாலி கட்டியதும் அப்பெண் “சுமங்கலி” அதாவது திருமணமானவள் என்ற அந்தஸ்தைப் பெறுகின்றாள். இரு வீட்டாரும் முதலில் சாதகப் பொருத்தத்தை ஆராய்வார்கள். தமிழ்நாட்டில் பெண்பார்க்கும் படல்போன்று இலங்கையிலும் பெண்ணைப் பொதுவிடங்களில் பார்ப்பது வழக்கமாகவுள்ளது. பின் நிச்சயதார்த்தத்தை உறுதிசெய்யப் பெண்வீட்டார் தாம்பூலம், பலகாரம், பழங்களோடும் உறவினரோடும் மணமகன் வீட்டிற்கு நல்ல நாள் பார்த்துச் செல்வர். இதன்பின் இரு வீட்டாரும் திருமணநாளைச் சோதிடரிடம் கேட்டு நிச்சயிப்பர். அத்தோடு பொன்னுருக்...

கடவுளுக்கு போடப்படும் பூணூலுக்கும் சாதிக்கும் சம்மந்தமில்லை

படம்
பூணூலுக்கும் சாதிக்கும் சம்மந்தமில்லை இங்கு சில விடயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன் பூணூல் பிராமணர்களின் அடையாளம் என்பது மிகவும் தவ்றான கணிப்புஅது எந்த ஒரு சடங்கை யார் செய்தாலும் அணிவிக்கப்பட்டுள்ளது வட இந்தியாவில் பிராமணர் அல்லாதவரும் பூணூல் போடுவர் தமிழகத்தில் நாட்டுக்கோட்டை செட்டியாரும் பூணூல் போடுவர் ஆச்சாரி எனப்படும் நகை செய்பவரும் பூணூல் போடுவர் குஜராத்தில் ஏறக்குறைய எல்லோருமே பூணூல் போடுகிறார்கள் வேத முறை படி நீங்கள் திருமணம் செய்தால் உங்களுக்கும் பூணூல் அணிவிக்கப்பட்டுதான் திருமணம் நடத்த படும் பூனூல் என்பது ஒரு சாதியின் அடையாளமாக முன்பு இருக்கவில்லை, அது சடங்கு செய்யும்போது அணிவிக்கும் ஒன்றாக இருந்தது, பிராமணர்கள் எப்போதும் சடங்கு செய்வதையே தொழிலாக கொண்டிருந்ததால் எப்போதும் பூணூல் அணிந்தனர் உண்மைதான்.. அது அவ்வாறு திரிந்துவிட்டது... ஆனால் நான் இங்கு சொல்ல வந்தது என்னவென்றால் கடவுள்களுக்கு பூணூல் இருப்பதினால் அவர்கள் பிராமணர்கள் என்ற அர்த்தம் கிடையாது என்பதுதான் உதாரணமாக இராமருக்கும் பூணூல் இருக்கும், ஆனால் அவர் அந்த அவதாரத்தில் ஷத்ரியர், பிராமணர் அல்ல என்பது கதையிலேயே கூறப்பட்...

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

படம்
கோயிலுக்குச் செல்கிறபோது இறைவனின் அருளை வேண்டுகிறோம். அங்குள்ள சிற்பங்களின் அழகில் மயங்குகிறோம். ஆனால் ஆலய அமைப்பு முறையில் ஓர் அற்புதமான தத்துவம் இருப்பதை எல்லோரும் அறிவதில்லை. கடவுளை மட்டுமல்ல, அவன் உறையும் கோயிலைக் கூட மனிதனைப் போலவே அமைத்திருக்கிறார்கள் முன்னோர்கள். . 'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில் தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே' என்பது திருமூலர் அருட்பாடல். அவர் உடலே கோயில் என்றார். உடம்பே கோயிலாய் எழுந்துள்ளது என்பதை 'க்ஷத்திரம் சரீரப் பிரஸ்தாரம்' என்கிறது ஆகமச் சொற்றொடர். உடம்பில் பாதங்கள் கோபுரமாகவும், முழங்கால் ஆஸ்தான மண்டபமாகவும், தொடை நிருத்த மண்டபமாகவும், கொப்பூழ் (தொப்புள்) பலி பீடமாகவும், மார்பு மகாமண்டபமாகவும், கழுத்து அர்த்த மண்டபமாகவும், சிரம் (தலை) கருவறையாகவும் கோயிலாய் எழுந்துள்ளது என்பது ஆகம மரபு. கோயில் அமைப்பில், உடலில் அன்னமய கோசம், பிரணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்த மய கோசம் ஆகிய ஐந்து உள்ளது போல கோயிலில் ஐந்து பிரகாரங்கள் உள்ளன. தூல சரீரம், ச...

இறைவன்

படம்
இறைவன் இறைவன் ஒருவன். அவனே பரம்பொருள், அவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன். அவன் ஒருவனே மெய்ப்பொருள். அவனுக்கு ஈடான பொருள் ஒன்றும் இல்லை. இதனைத் திருக்குறள் ″தனக்குவமை இல்லாதான் ″ என்கிறது. ஒன்று அவன்தானே என்கிறது திருமந்திரம். இதனை மாணிக்கவாசகர் ″முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளேபின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே″ - திருவெம்பாவை என்றார். இவை சைவ மரபின் இறைவன் ஒருவனே என்ற கோட்பாட்டை வலியுறுத்துவன. இறைவன் பசுபதி எனப் போற்றப்படுகின்றான். பசு என்றால் ஆன்மா. பதி என்றால் தலைவன். எனவே ஆன்மாக்கள் அனைத்திற்கும் தலைவன் இறைவன். அவனைச் சிவம் எனப் போற்றுவது சைவ மரபு. இறைவன் எங்கும் நிறைந்தவன். அவன் சத்து(உள்பொருள்) ஆகவும்ää சித்து(அறிவுடையபொருள்) ஆகவும், ஆனந்தம்(இன்பமயமானபொருள்) ஆகவும் விளங்குகின்றான். ஆதலால், இறைவன் சச்சிதானந்தன் எனவும் அழைக்கப்படுகின்றான். இறைவன் அருவம், அருவுருவம், உருவம் என்றும் மூன்று திருமேனிகளை எடுத்து ஆன்மாக்களுக்கு அருள் புரிவான். ″கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை ″ - திருக்குறள் தன்வயத்தனால்தூய உடம்பினனாதல் இயற்கை உணர்வினன...