இடுகைகள்

ஜூன் 22, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புரட்டாதிச்சனிக்கிழமை….சின்னவயதின் பசுமை நினைவுகள்……

படம்
புரட்டாதிச்சனிக்கிழமை காலச்சக்கரத்தின் சுழற்சி பிரமிப்பூட்டுகின்றது; ஒவ்வொரு வருடத்தின் போதும்   இப்படித்தான் சொல்லிக்கொண்டிருக்கின்றோம். இலங்கையில் அம்மா இருந்த போது இத்தனை வேகமாக நாட்கள் நகர்வதை நான் உணந்ததில்லை. அன்றிலிருந்து எப்படிப் வருடங்கள் ஓடி மறைந்ததோ என்பது ஆச்சரியமூட்டினாலும் உண்மையென்பதை மனம் உணர்ந்து கொள்கின்றது. எனக்கு மிகவும் பிடித்த விரதகாலங்களின் எனக்கு மிகப்பிடித்த புரட்டாதிச்சனிக்கிழமை விரதம். ஏன் பிடித்தது என்பதைச்சொன்னால்   சிரிப்பீர்கள்.அங்கிருந்த வாழ்க்கைக்கும் இங்கிருக்கும் வாழ்க்கைக்கும்   மிகப்பெரும் வேறுபாட்டை இங்குள்ள காலநிலைதான் வரையறுத்து வைத்திருக்கின்றது. அங்கிருந்த போது இந்த விரத நாட்கள் எல்லாம் எத்தனை மகிழ்ச்சியையும் நிறைவையும் நமக்குள் வார்த்து விட்டுப்போனது என்பதற்கான அடையாளமாய்….என் சின்னவயதின் பசுமை நினைவுகள்……   ‘அட! புரட்டாதிச்சனிக்கிழமை விரதம். அதைப்பற்றிச்சொல்லியே ஆகவேண்டும். அம்மா, அப்பா, அக்கா அண்ணாவோடு விளையாட்டாக நாங்கள் ஆரம்பித்த விரதம் இது ஏனெண்டால் விரதகாரருக்கு மட்டும் தான் “வாழையிலையில்” விருந்து கிடைக்கும். அந்த வ...