இடுகைகள்

அக்டோபர் 25, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திருப்புகழ் கைத்தல நிறைகனி

படம்
கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி      கப்பிய கரிமுக ...... னடிபேணிக் கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ      கற்பக மெனவினை ...... கடிதேகும் மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்      மற்பொரு திரள்புய ...... மதயானை மத்தள வயிறனை உத்தமி புதல்வனை      மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்      முற்பட எழுதிய ...... முதல்வோனே முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்      அச்சது பொடிசெய்த ...... அதிதீரா அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்      அப்புன மதனிடை ...... இபமாகி அக்குற மகளுட னச்சிறு முருகனை      அக்கண மணமருள் ...... பெருமாளே. .........  விளக்கம் ......... கைத்தல நிறைகனி அப்ப மொடு அவல் பொரி கப்பிய கரிமுகன் அடிபேணி ... கரதலத்தில் நிறைந்துள்ள பழம், அப்பம், அவல், பொரி (இவைகளை) வாரி உண்ணும் யானை முகக் கடவுளின் திருவடிகளை விரும்பி, கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ கற்பகம் எனவினை கடிதேகும்...