யாழ் புங்குடுதீவு தமிழ் பெண்பிள்ளைகள் பருவமடைந்திருக்கும் போது கொடுக்கக் கூடிய உணவுகள்
யாழ் புங்குடுதீவு தமிழ் பெண்பிள்ளைகள் பருவமடைந்திருக்கும் போது கொடுக்கக் கூடிய உணவுகள் பெண்பிள்ளைகள பருவமடைந்திருக்கும் காலத்தில் சாதாரணமாக ஏற்படக்கூடிய உடற்சுகயினங்கள், மற்றும் உடல் வளர்ச்சி, உடற்பாதுகாப்பு போன்ற தேவைகளுக்காகப் புரதச்சத்தும், கல்சியம், இரும்பு முதலாய கனிப்பொருட்களும் அவர்களின் நாளாந்த உணவில் இருமடங்காகச் சேர்த்துக் கொள்ளப்படல் வேண்டும். மேற்கூறிய உடலியற் தேவைகளை நிறைவேற்றக் கூடியதாகத் தேவையான போசணைச் சத்துக்களைப் பெருமளவில் உள்ளடக்கியதாக இங்கே உணவு அட்டவணையும், முக்கியமான உணவுகளின் தயாரிப்புகளும் தரப்பட்டுள்ளன. குறிப்பு : • எம் யாழ்ப்பாணத் தமிழருக்கே உரியதான பாரம்பரிய பரிகரிப்பு முறைகளே இங்கு முற்றாகத் தழுவப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. • மாதிரி உணவுகள் கொடுக்கும் படிமுறையும், காலமும் 1 உப்பெண்ணெய் பருவமடைந்த தினம் உப்பெண்ணெய் தேவையான பொருட்கள்:- நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி உப்பு - அளவாக செய்முறை :- நல்லெண்ணெயையும் உப்பும் சேர்த்துக் நன்கு கலந்து கொள்ளவும். குறிப்பு : • பருவமடைந்த தினத்தன்று முதன்முதலாக இத்திரவ உணவைக் கொடுப்பது வழக்கத...