மகப்பேறு அடைந்துள்ள தாய்மாருக்கான உணவுகள்
மகப்பேறு அடைந்துள்ள தாய்மாருக்கான உணவுகள்
கொடுக்கும் உணவு கொடுக்கும் படிமுறையும் காலமும்
* 1st day (பிரசவித்த தினம்)
கோப்பி, ஹொர்லிக்ஸ் போன்ற திரவ உணவுகள் , பிஸ்கட் , bread, oats with milk
*2nd & 3rd day (2ம், 3ம், நாள் )
Double polish சிவப்புப் பச்சை அரிசிச் சோறு (தவிடு நீக்கிய சிவப்புப் பச்சை அரிசியில் தயாரிக்கப்பட வேண்டும்.) தனி பத்தியக்கறி (மதிய உணவாக)
இடியப்பம், தனி பத்தியக்கறி (இரவு உணவு)
தனிபத்தியக்கறி
தேவையான பொருட்கள்:-
நற்சீரகம் -1 ½ மேசைக் கரண்டி
மஞ்சள் - சிறிய துண்டு
இஞ்சி - சிறிய துண்டு
வேர்க்கொம்பு - சிறிய துண்டு
மிளகு - 6
வெள்ளைப்பூடு - 6 பல்லு
உப்பு - அளவாக
நீர் - 2 தம்ளர்
செய்முறை :-
• சீரகம், மஞ்சள், இஞ்சி, வேர்க்கொம்பு, மிளகு, இவற்றை நன்கு பசுந்தாக அரைத்து இரண்டு பல்லு வெள்ளைப் பூண்டையும் சேர்த்து அரைத்துத் திரணையாக்கவும்
• அரைத்த கூட்டை நீரிலிட்டு உப்பும் சேர்த்துக் கரைத்து மிகுதி வெள்ளைப்பூட்டையும் சேர்த்துக் கொதிக்க வைத்து வற்றமுன் இறக்கிக் கொள்ளவும்.
* 4th day to 1 month (4ம் நாள் தொடக்கம் தொடர்ந்து 1 மாதம் வரை மதிய -இரவு உணவு )
கைக்குத்தரிசிச்சோறு, தனிபத்தியக்கறி,
கத்தரிக்காய்ப் பத்தியக்கறி,
பிஞ்சு முருங்கைக் காய் பத்தியக்கறி சீரக முட்டைப் பொரியல், காய்கறிவகை, பாற்கறி
மீன்பத்தியக்கறி (7ம் நாட்களின் பின் சேர்த்துக்கொள்ளலாம்)
* 5th day (5ம் நாட்களின் பின் காலை நேரம்)
முட்டைக் கோப்பி
*4th day ,5th day ,6th day
3-ம் நாளின்பின் தொடர்ந்து 3 நாட்கள் காலை (காலை உணவு தவிர்த்தல்)
வேப்பிலைக்காம்பு காயம் பனங்கட்டியுடன்
வேப்பிலைக் காயம்
தேவையான பொருட்கள்:-
நற்சீரகம் - 1 ½மேசைக்கரண்டி
மஞ்சள் - சிறிய துண்டு
மிளகு - 2
இஞ்சி - சிறிய துண்டு
வேப்பிலைக்காம்பு - 15
பனங்கட்டி - 1½ மேசைக்கரண்டி
தண்ணீர் - 1 ½ தம்ளர்
உப்பு - அளவாக
செய்முறை :-
• நற்சீரகம், மஞ்சள், மிளகு, இஞ்சி யாவற்றையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
• வேப்பமிலையை உருவியபின் காம்பை எடுத்து உரலில் இட்டுத் துவைத்துக் கொள்ளவும்.
• அத் துவையலுடன் சிறிதளவு நீர் சேர்த்து சுத்தமான வெள்ளைத் துணியிலிட்டுப் பிளிந்து ¼ தம்ளர் சாறு எடுத்துக் கொள்ளவும்.
• அரைத்த கூட்டைத் தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும்.
• அக்கரைசலுடன் வேப்பம் சாற்றைக் கலந்து சிறிதளவு உப்பும் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.
• காயம் கூழ்ப்பதமாக வரும்போது இறக்கி ஆறவிடவும்.
• நன்கு ஆறியபின் பனங்கட்டியுடன் பருகக் கொடுக்கவும்.
குறிப்பு
வயிற்று நோ, உடல் நோ, மலச்சிக்கலை அகற்றல், அழுக்குகளை வெளியேற்றல், மற்றும் புண் தொற்றுக்கள் ஏற்படாமை என்பனவற்றுக்கு இவ் வேப்பிலைக் காயம் மிகவும் பொருத்தமானது.
* 7th day
7-ம் நாள் தொடக்கம் தொடர்ந்து 10 நாட்கள் காலை (காலை உணவு தவிர்த்தல்)
பச்சைச் சரக்கு
தேவையான பொருட்கள் :-
நற்சீரகம் - 1½ மேசைக்கரண்டி
மஞ்சள் - சிறிய துண்டு
மிளகு - 2
இஞ்சி - சிறிய துண்டு
பனங்கட்டி - ½ மேசைக்கரண்டி
செய்முறை :-
• நற்சீரகம், மஞ்சள், மிளகு, இஞ்சி யாவற்றையும், அம்மியில் வைத்து நன்கு பசுந்தாக அரைத்துக் கொள்ளவும்.
• அரைத்து இறுக்கமான உருண்டையாக்கிக் கொள்ளவும்.
• அதனுடன் பனங்கட்டியையும் உதிர்த்துச் சேர்த்து விழுங்கக் கூடிய சிறு உருண்டைகளாக்கிக் கொடுக்கவும்.
குறிப்பு :-
முதல் மூன்று நாட்களின் பின் தொடர்ந்து பத்து நாட்களுக்குக் காலையில் கொடுக்கலாம். குழந்தையைப் பிரசுவித்த தாய்மாருக்கும் பொருத்தமானது
* 8th day
இடியப்பம் 8ம் நாளின் பின் இரவு உணவாக.
15th day
ஊதுமாக்கூழ் 15ம் நாளின் பின் இடைஇடையே மாலை, இடைவேளை
* 20th day
கோழிவிறாத்து (கோழி பத்தியக்கறி) 20ம் நாளின்பின் இடையிடையே கொடுக்கலாம்
*21th day
இதரைவாழைப்பழம், பப்பாசிப்பழம் 21ம் நாளின் பின் சாப்பிட்டபின்
* 21day
ஓட்டுமா / பொரி அரிசிமா 21ம் நாட்களின் பின் காலை - மாலை இடைவேளை
*31st
எள்ளுப்பா 31ம் நாட்களின் பின் காலை – மாலை இடைவேளை
*1st day untill feeding
குழந்தைக்கான பால் உற்பத்திக்கு
காலை - மாலை இடைவேளை
Oats with milk
Mothers Horliks
Nestam, with milk
Nestamalt, Protnex

கருத்துகள்