யாழ் புங்குடுதீவு தமிழ் பெண்பிள்ளைகள் பருவமடைந்திருக்கும் போது கொடுக்கக் கூடிய உணவுகள்
யாழ் புங்குடுதீவு தமிழ் பெண்பிள்ளைகள் பருவமடைந்திருக்கும் போது கொடுக்கக் கூடிய உணவுகள்
பெண்பிள்ளைகள பருவமடைந்திருக்கும் காலத்தில் சாதாரணமாக ஏற்படக்கூடிய உடற்சுகயினங்கள், மற்றும் உடல் வளர்ச்சி, உடற்பாதுகாப்பு போன்ற தேவைகளுக்காகப் புரதச்சத்தும், கல்சியம், இரும்பு முதலாய கனிப்பொருட்களும் அவர்களின் நாளாந்த உணவில் இருமடங்காகச் சேர்த்துக் கொள்ளப்படல் வேண்டும்.
மேற்கூறிய உடலியற் தேவைகளை நிறைவேற்றக் கூடியதாகத் தேவையான போசணைச் சத்துக்களைப் பெருமளவில் உள்ளடக்கியதாக இங்கே உணவு அட்டவணையும், முக்கியமான உணவுகளின் தயாரிப்புகளும் தரப்பட்டுள்ளன.
குறிப்பு :
• எம் யாழ்ப்பாணத் தமிழருக்கே உரியதான பாரம்பரிய பரிகரிப்பு முறைகளே இங்கு முற்றாகத் தழுவப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
• மாதிரி
உணவுகள் கொடுக்கும் படிமுறையும், காலமும்
1 உப்பெண்ணெய் பருவமடைந்த தினம்
உப்பெண்ணெய்
தேவையான பொருட்கள்:-
நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
உப்பு - அளவாக
செய்முறை :-
நல்லெண்ணெயையும் உப்பும் சேர்த்துக் நன்கு கலந்து கொள்ளவும்.
குறிப்பு :
• பருவமடைந்த தினத்தன்று முதன்முதலாக இத்திரவ உணவைக் கொடுப்பது வழக்கத்திலுள்ளது.
2 கத்தரிக்காய்ச்சாறு பச்சை முட்டை
நல்லெண்ணெய் தொடர்ந்து முதல் 3 நாட்கள் அதிகாலை
கத்தரிக்காய்ச் சாறும் - பச்சை முட்டையும்
செய்முறை :-
• பிஞ்சுப்பதமான கத்தரிக்காயை வெட்டிக் கழுவித் துவைத்து இரண்டு மேசைக் கரண்டியளவு சாறு எடுக்கவும். பச்சை முட்டையைக் கொடுத்ததன் பின் - சாற்றைக் கொடுக்கவும் (தொடர்ந்து முதல் ஏழுநாட்களுக்கு அதிகாலையில் கொடுக்கலாம் அத்துடன் நல்லெண்ணெய் கொடுப்பது வழக்கம்.)
3 முட்டைக் கோப்பி
3 நாட்களின் பின் தொடர்ந்து காலை நேரம்.
4 மஞ்சட் கூட்டு
2 ம் நாள் தொடக்கம் தொடர்ந்து 3 நாள் காலை இடைவேளை
மஞ்சட்கூட்டு
தேவையான பொருட்கள் :-
நற்சீரகம் - 1 மேசைக்கரண்டி
மஞ்சள் - சிறிய துண்டு
பனங்கட்டி - ½ மேசைக்கரண்டி
வேப்பிலைக் கொழுந்து - 5 (சிறிது)
நொச்சி கொழுந்து -5 (சிறிது)
மாதுளை கொழுந்து -5 (சிறிது)
செய்முறை :-
• நற்சீரகம், மஞ்சள், வேப்பிலைக் கொழுந்து ,நொச்சி கொழுந்து ,மாதுளை கொழுந்து யாவற்றையும், அம்மியில் வைத்து நன்கு பசுந்தாக அரைத்துக் கொள்ளவும்.
• அரைத்து இறுக்கமான உருண்டையாக்கிக் கொள்ளவும்.
• அதனுடன் பனங்கட்டியையும் உதிர்த்துச் சேர்த்து விழுங்கக் கூடிய சிறு உருண்டைகளாக்கிக் கொடுக்கவும்.
5 பச்சைச் சரக்கு
5ம் நாள் தொடக்கம் தொடர்ந்து 15 நாட்கள் வரை காலை- இடைவேளை
பச்சைச் சரக்கு
தேவையான பொருட்கள் :-
நற்சீரகம் - 1½ மேசைக்கரண்டி
மஞ்சள் - சிறிய துண்டு
மிளகு - 2
இஞ்சி - சிறிய துண்டு
பனங்கட்டி - ½ மேசைக்கரண்டி
செய்முறை :-
• நற்சீரகம், மஞ்சள், மிளகு, இஞ்சி யாவற்றையும், அம்மியில் வைத்து நன்கு பசுந்தாக அரைத்துக் கொள்ளவும்.
• அரைத்து இறுக்கமான உருண்டையாக்கிக் கொள்ளவும்.
• அதனுடன் பனங்கட்டியையும் உதிர்த்துச் சேர்த்து விழுங்கக் கூடிய சிறு உருண்டைகளாக்கிக் கொடுக்கவும்.
6 பாற்சோறுடன் தனிபத்தியக்கறி
பருவமடைந்த தினம் தொடக்கம் தொடர்ந்து 07 நாட்கள் வரை மதியம்- இரவு
பாற்சோறு தவிடு நீக்கிய சிவப்புப் பச்சை அரிசியில் தயாரிக்கப்பட வேண்டும்.
தனிபத்தியக்கறி
தேவையான பொருட்கள்:-
நற்சீரகம் -1 ½ மேசைக் கரண்டி
மஞ்சள் - சிறிய துண்டு
இஞ்சி - சிறிய துண்டு
வேர்க்கொம்பு - சிறிய துண்டு
மிளகு - 6
வெள்ளைப்பூடு - 6 பல்லு
உப்பு - அளவாக
நீர் - 2 தம்ளர்
செய்முறை :-
• சீரகம், மஞ்சள், இஞ்சி, வேர்க்கொம்பு, மிளகு, இவற்றை நன்கு பசுந்தாக அரைத்து இரண்டு பல்லு வெள்ளைப் பூண்டையும் சேர்த்து அரைத்துத் திரணையாக்கவும்
• அரைத்த கூட்டை நீரிலிட்டு உப்பும் சேர்த்துக் கரைத்து மிகுதி வெள்ளைப்பூட்டையும் சேர்த்துக் கொதிக்க வைத்து வற்றமுன் இறக்கிக் கொள்ளவும்.
7.கைக்குத்தரிசிச்சோறு
7 நாட்களின் பின் தொடர்ச்சியாக மதியம் இரவு
கைக்குத்தரிசிச்சோறு, சீரக முட்டைப் பொரியல், கத்தரிக்காய், வெங்காயப் பொரியல், தனிபத்தியக்கறி, காய்கறி வகை, பாற்கறி
15 நாட்களின் பின் மீன்பத்தியக்கறிகோழி விறாத்து(கோழி பத்தியக்கறி) மதியம் கொடுக்களாம்
8 உழுத்தங்களி
15 நாட்களின் பின் காலை- மாலை
9 வெங்காயப்பிட்டு
15 நாட்களின் பின் காலை
10 ஆலங்காய்ப்பிட்டு
15 நாட்களின் பின் காலை-மாலை
11 ஓட்டுமா (முட்டைமா)
20 நாட்களின் பின் காலை-மாலை இடைவேளை
12 எள்ளுப் பா
20 நாட்களின் பின் காலை-மாலை இடைவேளை

கருத்துகள்