இடுகைகள்

2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பூப்புனித நீராட்டுவிழா முதல் பாரம்பரிய சடங்குகள்

படம்
பூப்புனித நீராட்டுவிழா முதல் பாரம்பரிய சடங்குகள் பெண் முதல் மாதப்போக்கு ஏற்பட்ட அன்றே சில சடங்குகள் உள்ளதாயினும், பூப்புனித நீராட்டுவிழா 9ஆம் 11ஆம் நாட்கள் அல்லது அதையடுத்துவரும் நாட்களில் அல்லது மாதங்களில் நடத்தப்படுகின்றன.  இவ்விழா மற்றும் இதற்கான சடங்குகள் அவர்கள் சார்ந்த இடம், மக்கள் கூட்டம் போன்றவைகளுக்கு ஏற்பசடங்குகள் இடத்துக்கு இடம் மாறுகின்றன . அன்றைய காலங்களில் கிணற்றடியில் காய்ந்த இலைகளின் மேல் இருத்தி தாய் மாமன் தேங்காய் உடைக்க,மாமி(தந்தையின் சகோதரி) தண்ணீர் ஊற்றி நீராட்டுவார்கள்.  இந்நிகழ்வு நடைபெறும் பொழுது வெள்ளி தெரிந்தவுடன் வரும் மாலைப்பொழுதாகும்.  கிணற்றடி பொது இடம், பெண்ணில் இருந்து வெளிப்படும் தீட்டு பிறர் கண்ணில்படாது குப்பைக்குள் மறைந்துவிடும் என்பதால் காய்ந்த இலைகளின் மேல் இருத்தி நீராட்டுவார்கள்.  இது முதற்தண்ணி அல்லது கண்ட தண்ணி வார்த்தல் எனப்படும். பின்பு பெண்ணிற்கு புதிய ஆடை அணிவித்து பெற்றோரினது காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றபின்னர் உப்பெண்ணெய் (முதற்தணணி வார்த்ததும் கொடுப்பார்கள்) உப்பெண்ணெய்  தேவையான பொருட்கள்:- நல்லெண்ணெய் - 1 ...

யாழ் புங்குடுதீவு தமிழ் பெண்பிள்ளைகள் பருவமடைந்திருக்கும் போது கொடுக்கக் கூடிய உணவுகள்

படம்
  யாழ் புங்குடுதீவு தமிழ் பெண்பிள்ளைகள் பருவமடைந்திருக்கும் போது கொடுக்கக் கூடிய உணவுகள் பெண்பிள்ளைகள பருவமடைந்திருக்கும் காலத்தில் சாதாரணமாக ஏற்படக்கூடிய உடற்சுகயினங்கள், மற்றும் உடல் வளர்ச்சி, உடற்பாதுகாப்பு போன்ற தேவைகளுக்காகப் புரதச்சத்தும், கல்சியம், இரும்பு முதலாய கனிப்பொருட்களும் அவர்களின் நாளாந்த உணவில் இருமடங்காகச் சேர்த்துக் கொள்ளப்படல் வேண்டும்.  மேற்கூறிய உடலியற் தேவைகளை நிறைவேற்றக் கூடியதாகத் தேவையான போசணைச் சத்துக்களைப் பெருமளவில் உள்ளடக்கியதாக இங்கே உணவு அட்டவணையும், முக்கியமான உணவுகளின் தயாரிப்புகளும் தரப்பட்டுள்ளன. குறிப்பு : • எம் யாழ்ப்பாணத் தமிழருக்கே உரியதான பாரம்பரிய பரிகரிப்பு முறைகளே இங்கு முற்றாகத் தழுவப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. • மாதிரி  உணவுகள் கொடுக்கும் படிமுறையும், காலமும் 1 உப்பெண்ணெய் பருவமடைந்த தினம் உப்பெண்ணெய் தேவையான பொருட்கள்:- நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி உப்பு - அளவாக செய்முறை :- நல்லெண்ணெயையும் உப்பும் சேர்த்துக் நன்கு கலந்து கொள்ளவும். குறிப்பு : • பருவமடைந்த தினத்தன்று முதன்முதலாக இத்திரவ உணவைக் கொடுப்பது வழக்கத...

மகப்பேறு அடைந்துள்ள தாய்மாருக்கான உணவுகள்

படம்
மகப்பேறு அடைந்துள்ள தாய்மாருக்கான உணவுகள் கொடுக்கும் உணவு கொடுக்கும் படிமுறையும் காலமும் * 1st day (பிரசவித்த தினம்) கோப்பி, ஹொர்லிக்ஸ் போன்ற திரவ உணவுகள் , பிஸ்கட் , bread, oats with milk  *2nd & 3rd day (2ம், 3ம், நாள் ) Double polish சிவப்புப் பச்சை அரிசிச் சோறு (தவிடு நீக்கிய சிவப்புப் பச்சை அரிசியில் தயாரிக்கப்பட வேண்டும்.) தனி பத்தியக்கறி (மதிய உணவாக) இடியப்பம், தனி பத்தியக்கறி (இரவு உணவு) தனிபத்தியக்கறி தேவையான பொருட்கள்:- நற்சீரகம் -1 ½ மேசைக் கரண்டி மஞ்சள் - சிறிய துண்டு இஞ்சி - சிறிய துண்டு வேர்க்கொம்பு - சிறிய துண்டு மிளகு - 6 வெள்ளைப்பூடு - 6 பல்லு உப்பு - அளவாக நீர் - 2 தம்ளர் செய்முறை :- • சீரகம், மஞ்சள், இஞ்சி, வேர்க்கொம்பு, மிளகு, இவற்றை நன்கு பசுந்தாக அரைத்து இரண்டு பல்லு வெள்ளைப் பூண்டையும் சேர்த்து அரைத்துத் திரணையாக்கவும் • அரைத்த கூட்டை நீரிலிட்டு உப்பும் சேர்த்துக் கரைத்து மிகுதி வெள்ளைப்பூட்டையும் சேர்த்துக் கொதிக்க வைத்து வற்றமுன் இறக்கிக் கொள்ளவும். * 4th day to 1 month (4ம் நாள் தொடக்கம் தொடர்ந்து 1 மாதம் வரை மதிய -இரவு உணவு ) கை...

யாழ்ப்பாணத் தமிழருக்கே உரிய சாமர்த்தியச் சடங்கு ஆரத்திப் பொருட்கள்

படம்
  சாமர்த்தியச் சடங்கு ஆரத்திப் பொருட்கள்  எம் யாழ்ப்பாணத் தமிழருக்கே உரியதான பாரம்பரிய  முறைகளே இங்கு முற்றாகத் தழுவப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. • நிறை நாழி • புட்டு • களி • பால்சாதம் • சோறுகறி • தேங்காய்த் தட்டம் • பழங்கள் • பலகாரம் • பன்னீர்த்தட்டம் • வெற்றிலை பாக்கு எலுமிச்சை • பூத்தட்டு  • வெள்ரொட்டி வேப்பிலை, • வாழைப்பழம் ஆரத்தி  • களி ஆரத்தி ( யாழ் புங்குடுதீவு தமிழருக்கே உரிய சடங்கு ) 1.நிறை நாழி நிறை நாழி [நிறை நாழி கொத்தில் நெல்லை அதில் காம்புச்சத்தகத்தைக் கவிழ்த்துக் குத்தி சத்தகத்தை நிற்க வைத்து துனிக்காம்பில் ஒரு வெற்றிலை தேசிக்காயும் பனையோலையும் சொருகி வைப்பர். (சில பழைமையான வீடுகளில் பார்த்தால் அங்கு காம்புச் சத்தகத்திற்குப்பதில் எழுத்தாணி குத்தப்பட்டிருக்கும். ஆக, எழுத்தாணிதான் அங்கு வரவேண்டியது. அது கிடைக்காததால் அதற்குப் பதிலாக அதே உருவத்தில் நீளமான ஒரு இரும்பு தேவை என அதனைக் குத்தினார்கள்] 2.புட்டுதட்டம் வழமை போல் வறுத்த உழுத்தமா அரிசிமா கலந்து செய்த பிட்டை நீற்றுப் பெட்டியில் மும்முறை அவித்து தட்டத்தில் வைக்கப்படும். 3.களி...