இடுகைகள்

2008 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மகா சிவராத்திரி

படம்
மகா சிவராத்திரி கடைபிடிக்க வேண்டிய விரதமுறை மகா சிவராத்திரி நாளில் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய விரத முறைகள் பற்றிப் பார்ப்போம். சிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும். இவர்தான் சிவராத்திரி விரதம் இருக்கலாம். இவர் இருக்கக் கூடாது என்ற விதியெல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம். புராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம் கடை பிடிப்பது, நூறு அசுவமேத யாகம் செய்வது, பல முறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிப்பதற்கு ஈடாகாது சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, சூரிய உதயத்தின் போது காலையில் வீட்டில் செய்ய வேண்டிய பூஜையை முடிக்க வேண்டும். அதன் பின் சிவன் கோவிலுக்குப் போய் முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும். பூஜை செய்யும் இடத்தை மலர்களால் அலங்கரித்து நண்பகலில் குளித்து மாலையில் சிவார்ச்சனைக்கு உரிய பொருட்களோடு சிவன் கோவில் சென்று ஏற்பாடுகளைச் செய்யலாம். மாலையில் மீண்டும் குளித்து வீட்டி...

சிவாலயம் இலங்கையின் தெற்கில் இருந்ததாம். அது எது? இருந்த இடம் எங்கே?

படம்
தொண்டீஸ்வரம் அல்லது தொண்டேஸ்வரம் (திருத்தம்பேஸ்வரம்) புராதன காலத்திலிருந்தே திருத்தம்பேஸ்வரம் என்னும் பெயரில் புகழ்பூத்த சிவாலயம் இலங்கையின் தெற்கில் இருந்ததாம். இலங்கையின் தென்பகுதியில் அமைந்திருந்த இந்த தொண்டேஸ்வரம் நம்மில் பலர் அறியாத ஒன்று. மாத்தறை மாவட்டத்தில் தேவேந்திரமுனையில் அமைந்துள்ளது.முன்பு ஒரு கட்டுரை படித்தேன். தென்னிலங்கையில் கடற்கரையையொட்டினாற் போல உள்ள தேவிநுவர என இப்போது அழைக்கப்படும் ஊரில் கருங்கல்லினாலான சிவனுக்குரிய பெருங் கோவில் முன்னர் இருந்ததாம். தெய்வம் உவந்து உறைந்திருந்தமையால் தெய்வாந்துறையாகி, இது பின்னாளில் தேவி நுகர எனச் சிங்களத்தில் ஆகியதோ? இப்பொழுது அது விஷ்ணு வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது. பக்கத்தில் பெரிய புத்தர் சிலையும் உயர்ந்து நிற்கிறது. சிவத்தலம் (இதுவே திருத்தம்பலேஸ்வரமெனில்) பின்னாளில் விஷ்ணுத்தலமாக எப்படி மாறியது? ஆலயத்தை அவ்விடத்தைச் சேர்ந்த சிங்கள பௌத்த மக்கள் விஷ்ணு ஆலயமாக மாற்றியுள்ளனர். ஆய்வறிஞர் அந்தனிசில் மறைந்து போன பல உண்மைகளை அண்மைக்காலத்தில் ஆணித்தரமாக நிறுவி வருகின்றார். திறந்தவெளிக் கோயிலாக அமைந்திருந்த இக்கோயில் பின்னர் சந்திரசே...