சிவாலயம் இலங்கையின் தெற்கில் இருந்ததாம். அது எது? இருந்த இடம் எங்கே?



தொண்டீஸ்வரம் அல்லது தொண்டேஸ்வரம் (திருத்தம்பேஸ்வரம்) புராதன காலத்திலிருந்தே திருத்தம்பேஸ்வரம் என்னும் பெயரில் புகழ்பூத்த சிவாலயம் இலங்கையின் தெற்கில் இருந்ததாம்.

இலங்கையின் தென்பகுதியில் அமைந்திருந்த இந்த தொண்டேஸ்வரம் நம்மில் பலர் அறியாத ஒன்று. மாத்தறை மாவட்டத்தில் தேவேந்திரமுனையில் அமைந்துள்ளது.முன்பு ஒரு கட்டுரை படித்தேன். தென்னிலங்கையில் கடற்கரையையொட்டினாற் போல உள்ள தேவிநுவர என இப்போது அழைக்கப்படும் ஊரில் கருங்கல்லினாலான சிவனுக்குரிய பெருங் கோவில் முன்னர் இருந்ததாம். தெய்வம் உவந்து உறைந்திருந்தமையால் தெய்வாந்துறையாகி, இது பின்னாளில் தேவி நுகர எனச் சிங்களத்தில் ஆகியதோ? இப்பொழுது அது விஷ்ணு வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது. பக்கத்தில் பெரிய புத்தர் சிலையும் உயர்ந்து நிற்கிறது. சிவத்தலம் (இதுவே திருத்தம்பலேஸ்வரமெனில்) பின்னாளில் விஷ்ணுத்தலமாக எப்படி மாறியது? ஆலயத்தை அவ்விடத்தைச் சேர்ந்த சிங்கள பௌத்த மக்கள் விஷ்ணு ஆலயமாக மாற்றியுள்ளனர்.

ஆய்வறிஞர் அந்தனிசில் மறைந்து போன பல உண்மைகளை அண்மைக்காலத்தில் ஆணித்தரமாக நிறுவி வருகின்றார்.
திறந்தவெளிக் கோயிலாக அமைந்திருந்த இக்கோயில் பின்னர் சந்திரசேகரர் கோயிலாக உருமாறியது. மாத்தறைப் பகுதியில் விஜயன் சந்திரசேகரர் ஆலயத்தை அமைத்தான் என யாழ்ப்பாண வைபவமாலை கூறுகின்றது.

கி.பி. 150 ஆண்டுகளில் வாழ்ந்த தொலமி தனது குறிப்புகளில் இக்கோயில் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். 14ம் நூற்றாண்டில் இலங்கையில் பயணம் மேற்கொண்ட இபின் பட்டுட்ட என்ற அரேபியர் இக்கோயிலைப் பற்றிக் குறிப்பிடுவதுடன் அங்கு நடைபெற்ற வருடாந்த விழா பற்றியும் விபரித்துக் கூறுகின்றார். இவரது குறிப்புகளின்படி அப்பகுதியில் பெருமளவில் இந்துக்கள வாழ்ந்தார்கள் எனவும், ஆயிரக்கணக்கான பிராமணர்கள் வழிபாடு நடத்தியதாகவும், பொற்கொல்லர்கள், நடனமாதுக்கள் இருந்ததாகவும் அறியக் கூடியதாகவுள்ளது.

தெவிநுவரவில் 1998 நவம்பரில் தொண்டேஸ்வரம் நந்தி ஆகழ்ந்தெடுக்கப்பட்டதாக News Lanka என்ற லண்டன் வார இதழ் ஒன்று 5 நவம்பர் 1998 ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

மாத்தறைப் பகுதி மட்டுமன்றி காலி நகரில் இருந்து கதிர்காமம் வரை உள்ள பிரதேசம் சைவர்களின் ஒரு புண்ணிய பூமியாக விளங்கியது எனலாம். தமிழ்க்கடவுளான முருகனை அடைவதற்கென வள்ளி அவதாரம் செய்த வள்ளிமலை, முருகன் வேடனாக, வேங்கையாய் நாடகமாடிய கதிர்காமம், முருகனுடன் வள்ளியை விநாயகர் சேர்த்து வைத்த செல்லக்கதிர்காமம் ஆகியன இப்புண்ணியபூமியில் அடங்குவன.

புத்தசமயம் பிறப்பதற்கு பல காலத்துக்கு முன்பே கதிர்காமம் ஒரு பிரசித்தி பெற்ற தலமாக விளங்கியது. புத்தர் இலங்கையில் விஜயம் செய்த 16 இடங்களில் கதிர்காமமும் ஒன்று என்று பேராசிரியர் பரணவிதாரண குறிப்பிடுகின்றார்.

சேர் பொன்னம்பலம் அருணாசலம் தனது நூலில் இலங்கையில் முருக வழிபாடு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரேயே இருந்தது எனவும், எல்லாப் புத்தவழிபாட்டுத் தலங்களிலும் கொண்டாட்டங்களிலும் இது முக்கிய இடம் பெற்றது என்றும் 18ம் நூற்றாண்டில் கீர்த்தி ஸ்ரீ இராசசிங்கனால் புத்தரது தந்தம் கண்டிப் பெரஹரவில் அறிமுகப்படுத்தும் வரை கண்டிப் பெரகரவில் கூட முருகன் முக்கிய இடம் பெற்றதாகவும் குறிப்பிடுகின்றார்.

சஞ்சீவி மலையைத் தூக்கி வந்த அனுமன் காலியில் இருந்த மீனாட்சிசுந்தரரை வணங்கினான் என்பது ஐதீகம். வேறு மலையொன்றும் அற்ற காலி நகரில் கடற்கரையில் கம்பீரமாக ஒரு மலை காணப்படுவதும் அம்மலை சிங்களத்தில் "உண வற்றுணா" (நோய் அகன்றது) என அழைக்கப்படுவதும் இதை உறுதி செய்கின்றன.

இன்று கதிர்காமம், தொண்டேஸ்வரம் இந்துக் கோயில்களாக இருந்தது என்பது பொய்யாய், பழங்கதையாய், கனவாய் மாறிக் கொண்டிருப்பதைக் கண்கூடாகக் காண்கின்றோம்.

திருத்தம்பலேஸ்வரம் எது என்பதையிட்டு அக்கறையெடுத்தால் உண்மை வெளிச்சத்திற்கு வரும்.

நன்றி:
Sritharan
தென்னிலங்கையின் சைவாலயங்கள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

​ஆடி அமாவாசை விரதம் / சித்ரா பௌர்ணமி விரதம் ::

வீட்டில் இறந்தவர்களின் படங்களை எப்படி வைத்து வழிபட வேண்டும்?

பித்ரு தோஷம்