பூப்புனித நீராட்டுவிழா முதல் பாரம்பரிய சடங்குகள்
பூப்புனித நீராட்டுவிழா முதல் பாரம்பரிய சடங்குகள் பெண் முதல் மாதப்போக்கு ஏற்பட்ட அன்றே சில சடங்குகள் உள்ளதாயினும், பூப்புனித நீராட்டுவிழா 9ஆம் 11ஆம் நாட்கள் அல்லது அதையடுத்துவரும் நாட்களில் அல்லது மாதங்களில் நடத்தப்படுகின்றன. இவ்விழா மற்றும் இதற்கான சடங்குகள் அவர்கள் சார்ந்த இடம், மக்கள் கூட்டம் போன்றவைகளுக்கு ஏற்பசடங்குகள் இடத்துக்கு இடம் மாறுகின்றன . அன்றைய காலங்களில் கிணற்றடியில் காய்ந்த இலைகளின் மேல் இருத்தி தாய் மாமன் தேங்காய் உடைக்க,மாமி(தந்தையின் சகோதரி) தண்ணீர் ஊற்றி நீராட்டுவார்கள். இந்நிகழ்வு நடைபெறும் பொழுது வெள்ளி தெரிந்தவுடன் வரும் மாலைப்பொழுதாகும். கிணற்றடி பொது இடம், பெண்ணில் இருந்து வெளிப்படும் தீட்டு பிறர் கண்ணில்படாது குப்பைக்குள் மறைந்துவிடும் என்பதால் காய்ந்த இலைகளின் மேல் இருத்தி நீராட்டுவார்கள். இது முதற்தண்ணி அல்லது கண்ட தண்ணி வார்த்தல் எனப்படும். பின்பு பெண்ணிற்கு புதிய ஆடை அணிவித்து பெற்றோரினது காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றபின்னர் உப்பெண்ணெய் (முதற்தணணி வார்த்ததும் கொடுப்பார்கள்) உப்பெண்ணெய் தேவையான பொருட்கள்:- நல்லெண்ணெய் - 1 ...