இடுகைகள்

வீட்டில் எப்படி விளக்கு ஏற்றவேண்டும்

படம்
  வீட்டில் தினமும் எப்படி விளக்கு ஏற்றவேண்டும் உகந்த நேரம்  தினமும் விளக்கேற்றுவது தான் சரியான முறைவிளக்கு ஏற்றும்போது, கிழக்கு அல்லது வடக்கு திசையைப் பார்த்து ஏற்ற வேண்டும். காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகளிலும், சூரிய உதயத்திற்கு முன்பாகவும், சூரிய அஸ்தமனத்திற்கு பிறகும் விளக்கு ஏற்றுவது நல்லது. விளக்கு ஏற்றும் நேரம் • காலை: சூரிய உதயத்திற்கு முன்பாக (சுமார் 6 மணிக்கு முன்). • மாலை: சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு.  விளக்கு ஏற்றும் முறை • எண்ணெய்: தேங்காய்எண்ணெய் பசு நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும் அல்லது பஞ்ச கூட்டு எண்ணெய்போன்றவற்றை விளக்கேற்ற வீட்டில் பயன்படுத்தலாம் • திரி: எத்தனை திரிகள் போட்டாலும், அத்தனையும் ஏற்றிவிட வேண்டும்.  • விளக்கு அணைத்தல்: எண்ணெய் முழுவதும் தீர்ந்து தானாக அணைவதற்கு விடக்கூடாது. விளக்கு அணைக்கும்போது, கைகளை உயர்த்தி அணைக்கக் கூடாது.தூண்டு திரியை பயன்படுத்தி திரியை பின்னோக்கி இழுத்து விளக்கை மலையேற்றலாம். அல்லது பூவை பயன்படுத்தி தீபத்தின் சுடரை அழுத்தி, மலையேற்றலாம். ரூபாய் நாணயம் வைத்து, சுடரை அழுத்தி மலையே...

பல்லுக் கொழுக்கட்டை  கொட்டும் சடங்கு (விழா)

படம்
  பல்லுக் கொழுக்கட்டை  கொட்டும் சடங்கு (விழா) யாழ்ப்பாணத்து சைவத்தழிழ்  வழக்காற்றில்  முக்கிய பங்கு வகிப்பவை சடங்குகள். இத்தகைய  வாழ்வியல் சடங்குகளில்   சிறப்பு  பெறுவது  "கொழுக்கட்டை   கொட்டும் சடங்கு."  ஒரு குழந்தை  பிறந்தது முதல் பல சடங்குகள்  நிகழ்த்தப்படுகின்றன. அந்த வகையில்  குழந்தைக்கு  பல் முளைத்ததும், பல்கலைக் கண்ட அன்றையதினமோ  அல்லது சுபநாள் ஒன்றைத் தெரிவுசெய்து இச்சடங்கு நிகழ்த்தப்படும். பல்லுக் கொழுக்கட்டை அவித்தல் என்னும் சடங்கானது உற்ற உறவினர்களுடன் சிறப்பாக கொண்டாடுவார்கள்.கொழுக்கட்டையில் முன்பக்கத்திலே பல்லுப்பல்லாகப் பிடித்து அதன் மேல் பல்லுப் போலத் தேங்காய்ச் சொட்டினை வைப்பர்கள்.  நிறைகுடம்வைத்து விளக்கேற்றி ஒரு தேங்காயுடன் உடைப்பதற்கு கத்தியும் பாத்திரமும் வைப்பர்.  குழந்தையை பாயிலே இருத்தி தலையில் வெள்ளைத்துணி ஒன்றைப் போட்டு /குடைபிடித்திருக்க  வீட்டில் பெரியவர் தேங்காய் உடைக்க தட்டில் 9,11,15 என பலுக்கொழுக்கட்டை தாய்மாமன் அல்லது தந்தை கொட்டுவார்கள் குழந்தைக்கு முன்னா...

பித்ரு தோஷம்

படம்
  பித்ரு தோஷம்  என்பது முன்னோர்களுக்கு முறையாக செய்யப்படாத சடங்குகள் அல்லது அவர்களின் சாபம் காரணமாக ஏற்படும் ஒரு தோஷமாகும். இது ஒருவரின் வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். பரிகாரங்கள் மூலம் இந்த தோஷத்தை நீக்க முடியும்.  பித்ரு தோஷம் என்றால் என்ன? பித்ரு தோஷம் என்பது முன்னோர்களின் ஆசி கிடைக்காமல், அவர்களின் சாபம் அல்லது அவர்கள் இறந்தவுடன் செய்ய வேண்டிய சடங்குகள் முறையாக செய்யப்படாததால் ஏற்படும் ஒரு தோஷமாகும். இது ஒருவரின் ஜாதகத்தில் தோஷமாக கருதப்படுகிறது.  பித்ரு தோஷத்திற்கான அறிகுறிகள்:  • குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சனைகள் ஏற்படுதல். • நிதி நிலைமை மோசமடைதல். • குழந்தைப்பேறு இல்லாமை அல்லது தாமதமாகுதல். • திருமணத்தில் தடை ஏற்படுதல். • நோய்வாய்ப்படுதல். • மன அமைதி இல்லாமை.  பித்ரு தோஷம் நீங்க பரிகாரங்கள்:  • மாதந்தோறும் அமாவாசை /பௌர்ணமி ஆகிய நாட்களில் கண்டிப்பாக விரதம் இருந்து எள் கலந்த சாதத்தை காகத்திற்கு வைத்து முன்னோர்களை வழிபாடு மேற்கொள்ள பித்ரு தோஷத்திற்கான முதல் நிவாரணம்.  • வருடத்திற்கு மூன்று முறை வரும் தை அமாவாச...

வீட்டில் இறந்தவர்களின் படங்களை எப்படி வைத்து வழிபட வேண்டும்?

படம்
வீட்டில் இறந்தவர்களின் படங்களை எப்படி எந்த திசையில் வைத்து வழிபட வேண்டும்? இறந்தவர்களின் படம் என்பது இறந்தவர்களின் புகைப்படத்தைக் குறிக்கும். இறந்தவர்களின் படங்கள் பொதுவாக வீடுகளில் வைக்கப்படுகின்றன, குறிப்பாக கடவுள்களை வழிபடுவதை போன்று நமக்கு முன்பு வாழ்ந்து மறைந்த முன்னோர்களை வழிபடும் பழக்கம் நம்மிடம் உண்டு. உங்களது வீட்டில் எந்த இடத்தில் வேண்டும் என்றாலும் எந்த திசையில் என்றாலும் இறந்தவர்களின் படத்தை மாற்றிக் கொள்ளலாம். அதில் எந்த ஒரு தவறும் இல்லை. ஆனால் பூஜை அறையில் தெய்வபடங்களின் கீழே மாற்றிக் கொள்ளலாம். பூஜை அறையில் கீழே படத்தை வைத்து வழிபட்டால் அதிக நன்மைகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டில் இறந்தவர்களின் படங்களை வைக்கும்போது, சில விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.  அவை: படங்களை எங்கு வைக்கக்கூடாது *படங்களை படுக்கையறை அல்லது தெய்வங்களின் படங்களுடன் சேர்த்து வைக்கக்கூடாது. படங்களை எங்கு வைக்கக்கலாம் பூஜை அறையில் தெய்வபடங்களின் கீழே வைப்பது நல்லது.அல்லது படுக்கை அறையை தவிர்த்து விட்டு மற்ற எந்த இடத்தில் வேண்டுமானாலும் நமது முன்னோர்களின் படங்களை வைத்...

​ஆடி அமாவாசை விரதம் / சித்ரா பௌர்ணமி விரதம் ::

படம்
​ ஆடி அமாவாசை /சித்ரா பௌர்ணமியில் முன்னோர்களை நினைத்து வழிபட்டால் பாவங்கள், துன்பங்கள் தீரும். தடைகள் விலகி, நன்மைகள் நடக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் சித்ரா பௌர்ணமி, ஆடி அமாவாசை விரதம் எப்படி இருக்க வேண்டும், எந்த மாதிரியான விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். எந்த மாதிரியான விஷயங்களை கண்டிப்பாக செய்யக் கூடாது என பலருக்கும் தெரியாது. இவற்றை முறையாக தெரிந்து கொண்டு செய்வதால் அமாவாசை பௌர்ணமி விரதம் இருக்கும் பலன்களை நம்மால் முழுமையாக பெற முடியும். ஆடி அமாவாசை விரதம் :  அப்பா இழந்த ஆண்கள்,  கணவனை இழந்த மனைவிகள்  இருக்கும் விரதம் ஒரு வருடத்தில் நாம் எத்தனையோ விரதங்களை கடைபிடித்தாலும், அமாவாசை விரதம் என்பது மிகவும் புண்ணியங்களை தரக் கூடிய சிறப்பான விரதம் ஆகும். மற்ற அமாவாசைகளில் விரதம் இருப்பதை விட ஆடி அமாவாசை விரதம், தை அமாவாசை, மகாளய அமாவாசை நாட்களில் விரதம் இருப்பது கூடுதல் பலன்களை தரும். ஆனால் இந்த ஆடி அமாவாசை விரதத்தை யாரெல்லாம் இருக்கலாம், யாரொல்லாம் இருக்கக் கூடாது, அன்று என்ன செய்ய வேண்டும், எவற்றை எல்லாம் செய்யக் கூடாது என்ற வரை முறை உள்ளது. இது பலருக்கும...

மறைந்த  முன்னோர்களுக்கு  வருஷ திதி, (திவசம்) தர்ப்பணம்

படம்
  திதி கடைப்பிடிப்பது என்றால் என்ன? முன்னோர்களை, தகப்பனார்/தாயார் இறந்த திதியை வியாஜமாகக்கொண்டு நன்றியுடன் நினைவுகூறல். அதன் பொருட்டு படையல் போடபடும் பின்னர் குடும்பத்தினர் விருந்துபசாரத்தில் கலந்து கொள்வர்.  ஏன் கடைப்பிடிக்கிறார்கள்? காரணம், நன்றியுணர்ச்சியை மனத்தே இருக்கச்செய்து நம்மைப் பண்படுத்தவே. இறந்தவருடைய வருடாந்திர திதி ஒரு குறிப்பிட்ட நாளில்/திதியில் கொடுக்க முடியாத போது என்ன செய்வது? ஏன் கொடுக்க முடியாது மணமிருந்தால் மார்க்கம் உண்டு. அதேநாளில் தான் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. மறைந்த முன்னோர்களுக்கு நாம் செய்யும் சிரார்த்தங்களும், தர்ப்பணங்களும் நமது குடும்பத் தினரின் நன்மைக்காவே செய்யப்படுகிறது. அகவே தவறாது சிரார்த்தத்தையும் தர்ப்பணங்களையும் செய்ய வேண்டும். உத்தமமான நாள் என்பது தாய் தந்தையருக்கு சிரார்த்தம் செய்ய வேண்டி நாள்தான். அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரப்படவில்லை எ...

My wedding

படம்
 

நவராத்திரி பூஜை சரஸ்வதி பூஜை விஜயதசமி

படம்
நவராத்திரி பூஜை /சரஸ்வதி பூஜை / விஜயதசமி  (கொலு அமைக்கும் முறை, புராண விளக்கங்கள், ஒவ்வொரு நாளிலும் செய்ய வேண்டிய பிரஸாதங்கள் & வரைய வேண்டிய கோலங்கள்) சாக்த வழிபாடு என்பது சக்தியை, அம்பிகையை, அகிலாண்ட நாயகியை, அன்னை பராசக்தியை வழிபடும் பண்டிகைகளில் முக்கியமானது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாதான். புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை முதல் நவமி வரை மாலை வேளைகளில் அம்பிகையின் பல ரூபங்களை வழிபடுவது நவராத்திரி பூஜையாகும். நவமி அன்று சரஸ்வதி பூஜை. ஆயுத பூஜை என்றும் அழைக்கப்படும். நாம் செய்யும் செயல்கள், வித்தைகள் அனைத்திற்கும் அதிபதி சரஸ்வதி. ஆகவே அன்று வீட்டிலுள்ள கருவிகள், எழுதுகோல்கள், புத்தகங்கள் அனைத்தையும் அழகுற அமைத்து, சரஸ்வதி தேவியின் அருளைப் பெற வேண்டும் நிகழ்ச்சியாக நடைபெறும். அன்று அடுக்கிவைக்கப்பட்ட புத்தகங்கள் மற்றும் ஆயுதங்களை அன்றே உபயோகிக்காமல் மறுநாள் விஜயதசமி அன்று எடுக்கப்பட்டு உபயோகப்படுத்தப்படும். விஜய தசமி - வெற்றியைத் தரும் பத்தாம் நாள். பூஜிக்கப்பட்ட கருவிகள், எழுதுகோல்கள், புத்தகங்கள் அனைத்தும் எடுத்...

வைகுண்ட ஏகாதசி

படம்
வைகுண்ட ஏகாதசிவிரத முறை மற்றும் எப்படி விரதத்தை நிறைவு செய்வது? வைகுண்ட ஏகாதசி திருநாளில் பெருமாள் சொர்க்க வாசல் வழியாக வெளியே வரும் காட்சியைப் பக்தர்கள் கண் குளிர கண்டு தரிப்பது வழக்கம். வைகுண்ட ஏகாதசி நாளில் எப்படி விரதம் இருக்க வேண்டும். துவாதசி அன்று எப்படி விரதத்தை முடிக்க வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம் வைகுண்ட ஏகாதசி திருநாளில் பெருமாள் சொர்க்க வாசல் வழியாக வெளியே வரும் காட்சியைப் பக்தர்கள் கண் குளிர கண்டு தரிப்பது வழக்கம். வைகுண்ட ஏகாதசி என்பது ஒருநாள் தான் அதன் முன் வரும் பகல் பத்து, பின் வரும் இரா பத்து மிக விஷேசமானது. திருமங்கை ஆழ்வார் பெற்ற வரத்தின் படி, நாலாயிரம் திவ்யபிரபந்தத்தில் இருக்கும் பெரியாழ்வார் அருளிச்செய்திருக்கும் ஆயிரம் பாசுரங்கள் அமுதம் போன்றவை. இவற்றை நீங்கள் கேட்டு அருள வேண்டும் என வரம் கேட்டார். சரி என ஒப்புக்கொண்டு வரம் கொடுத்த பெருமாள், தினமும் 100 பாடல்கள் வீதம் பத்து நாட்கள் 1000 பாசுரங்களைக் கேட்பதாக அருளினார் அதற்கு இராபத்து என பெயர் வைத்தார். அதன் பின்னர் உன் மீது பாடப்பட்ட நாலாயிரம் திவ்யபிரபந்தங்களையும் கேட்டு அருள வேண்டும் என கேட்க, சரி சொல்ல இத...

பூப்புனித நீராட்டுவிழா முதல் பாரம்பரிய சடங்குகள்

படம்
பூப்புனித நீராட்டுவிழா முதல் பாரம்பரிய சடங்குகள் பெண் முதல் மாதப்போக்கு ஏற்பட்ட அன்றே சில சடங்குகள் உள்ளதாயினும், பூப்புனித நீராட்டுவிழா 9ஆம் 11ஆம் நாட்கள் அல்லது அதையடுத்துவரும் நாட்களில் அல்லது மாதங்களில் நடத்தப்படுகின்றன.  இவ்விழா மற்றும் இதற்கான சடங்குகள் அவர்கள் சார்ந்த இடம், மக்கள் கூட்டம் போன்றவைகளுக்கு ஏற்பசடங்குகள் இடத்துக்கு இடம் மாறுகின்றன . அன்றைய காலங்களில் கிணற்றடியில் காய்ந்த இலைகளின் மேல் இருத்தி தாய் மாமன் தேங்காய் உடைக்க,மாமி(தந்தையின் சகோதரி) தண்ணீர் ஊற்றி நீராட்டுவார்கள்.  இந்நிகழ்வு நடைபெறும் பொழுது வெள்ளி தெரிந்தவுடன் வரும் மாலைப்பொழுதாகும்.  கிணற்றடி பொது இடம், பெண்ணில் இருந்து வெளிப்படும் தீட்டு பிறர் கண்ணில்படாது குப்பைக்குள் மறைந்துவிடும் என்பதால் காய்ந்த இலைகளின் மேல் இருத்தி நீராட்டுவார்கள்.  இது முதற்தண்ணி அல்லது கண்ட தண்ணி வார்த்தல் எனப்படும். பின்பு பெண்ணிற்கு புதிய ஆடை அணிவித்து பெற்றோரினது காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றபின்னர் உப்பெண்ணெய் (முதற்தணணி வார்த்ததும் கொடுப்பார்கள்) உப்பெண்ணெய்  தேவையான பொருட்கள்:- நல்லெண்ணெய் - 1 ...