பல்லுக் கொழுக்கட்டை கொட்டும் சடங்கு (விழா)
பல்லுக் கொழுக்கட்டை கொட்டும் சடங்கு (விழா) யாழ்ப்பாணத்து சைவத்தழிழ் வழக்காற்றில் முக்கிய பங்கு வகிப்பவை சடங்குகள். இத்தகைய வாழ்வியல் சடங்குகளில் சிறப்பு பெறுவது "கொழுக்கட்டை கொட்டும் சடங்கு." ஒரு குழந்தை பிறந்தது முதல் பல சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன. அந்த வகையில் குழந்தைக்கு பல் முளைத்ததும், பல்கலைக் கண்ட அன்றையதினமோ அல்லது சுபநாள் ஒன்றைத் தெரிவுசெய்து இச்சடங்கு நிகழ்த்தப்படும். பல்லுக் கொழுக்கட்டை அவித்தல் என்னும் சடங்கானது உற்ற உறவினர்களுடன் சிறப்பாக கொண்டாடுவார்கள்.கொழுக்கட்டையில் முன்பக்கத்திலே பல்லுப்பல்லாகப் பிடித்து அதன் மேல் பல்லுப் போலத் தேங்காய்ச் சொட்டினை வைப்பர்கள். நிறைகுடம்வைத்து விளக்கேற்றி ஒரு தேங்காயுடன் உடைப்பதற்கு கத்தியும் பாத்திரமும் வைப்பர். குழந்தையை பாயிலே இருத்தி தலையில் வெள்ளைத்துணி ஒன்றைப் போட்டு /குடைபிடித்திருக்க வீட்டில் பெரியவர் தேங்காய் உடைக்க தட்டில் 9,11,15 என பலுக்கொழுக்கட்டை தாய்மாமன் அல்லது தந்தை கொட்டுவார்கள் குழந்தைக்கு முன்னா...