வீட்டில் எப்படி விளக்கு ஏற்றவேண்டும்

 


வீட்டில் தினமும் எப்படி விளக்கு ஏற்றவேண்டும் உகந்த நேரம் 


தினமும் விளக்கேற்றுவது தான் சரியான முறைவிளக்கு ஏற்றும்போது, கிழக்கு அல்லது வடக்கு திசையைப் பார்த்து ஏற்ற வேண்டும். காலை மற்றும் மாலை ஆகிய இரு வேளைகளிலும், சூரிய உதயத்திற்கு முன்பாகவும், சூரிய அஸ்தமனத்திற்கு பிறகும் விளக்கு ஏற்றுவது நல்லது.


விளக்கு ஏற்றும் நேரம்

• காலை: சூரிய உதயத்திற்கு முன்பாக (சுமார் 6 மணிக்கு முன்).

• மாலை: சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு. 

விளக்கு ஏற்றும் முறை

• எண்ணெய்: தேங்காய்எண்ணெய் பசு நெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும் அல்லது பஞ்ச கூட்டு எண்ணெய்போன்றவற்றை விளக்கேற்ற வீட்டில் பயன்படுத்தலாம்

• திரி: எத்தனை திரிகள் போட்டாலும், அத்தனையும் ஏற்றிவிட வேண்டும். 

• விளக்கு அணைத்தல்: எண்ணெய் முழுவதும் தீர்ந்து தானாக அணைவதற்கு விடக்கூடாது. விளக்கு அணைக்கும்போது, கைகளை உயர்த்தி அணைக்கக் கூடாது.தூண்டு திரியை பயன்படுத்தி திரியை பின்னோக்கி இழுத்து விளக்கை மலையேற்றலாம். அல்லது பூவை பயன்படுத்தி தீபத்தின் சுடரை அழுத்தி, மலையேற்றலாம். ரூபாய் நாணயம் வைத்து, சுடரை அழுத்தி மலையேற்றலாம். வாயால் ஊதியோ, கையை வைத்து விசிறியோ விளக்கை குளிர வைக்கக் கூடாது.


வீட்டில் எந்தெந்த விளக்கு பயன்படுத்தலாம்


குத்து விளக்கு

(குத்து விளக்கு ஏற்றும் போது ஒரு விளக்காக ஏற்ற முடியாது இரண்டு விளக்காக தான் ஏற்ற வேண்டும். அதனால் அது 10 தீபங்கள் என கணக்காகி விடும். அப்படி ஏற்றுவதில் தவறில்லை)

பெரும்பாலும் பித்தளை உலோகங்களில் தயாரிக்கப்படுகிறது.


ஓம் விளக்கு

ஒரு பாரம்பரிய தமிழ் விளக்கு இது பெரும்பாலும் பித்தளை,பஞ்சலோகம் உலோகங்களில் தயாரிக்கப்படுகிறது.


காமாட்சி விளக்கு(கஜலட்சுமி விளக்கு )

இருபுறமும் யானைகள் நீராட்டுவது போன்றோ அல்லது யானைகளுடன் தாமரை மலரில் அமர்ந்திருக்கும் கஜலட்சுமியின் உருவம் பொறிக்கப்பட்ட விளக்கு ஆகும். இது வெள்ளி ,பஞ்சலோகம், பித்தளை போன்ற உலோகங்களால் செய்யப்பட்டு, காமாட்சி விளக்குக்கு மாற்றாகவும் பல விசேஷங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்தக் கஜலட்சுமி விளக்கை ஏற்றுவது, வீட்டில் செல்வம் கொழிக்கவும், தோஷங்கள் நீங்கவும், நல்லருள் பெறவும் உதவும் என்று நம்பப்படுகிறது. 

அகல் விளக்கு மண் விளக்கு தயாரிக்கப்படுகிறது

• பிற குறிப்புகள்:

• பித்தளை, வெள்ளி,மண், பஞ்சலோக விளக்குகளைப் பயன்படுத்துவது நல்லது. ஸ்டீல் விளக்குகளைத் தவிர்க்கவும். 


வீட்டில் தினமும் விளக்கு ஏற்ற பயன்படுத்த வேண்டிய திரிகள் அவற்றின் பயன்கள்

பஞ்சுத்திரி /வெள்ளை துணி திரி

சகல நன்மைகளையும் தரக்கூடியது. குடும்ப ஒற்றுமை, மங்கலம் தரும்.

விளக்கு ஏற்றக் கூடிய, கூடாத திசைகள்

கிழக்கு - துன்பம் அனைத்தும் நீங்கும்.மேற்கு - கடன்களையும், தோஷங்களையும் நீக்கும்வடக்கு - செல்வம், ஞானம், அறிவு ஆகியவற்றை வளர்க்கும்தெற்கு - தெற்கு திசை நோக்கி தீபம் ஏற்றக் கூடாது.

ஆண்கள் விளக்கேற்றலாமா ?

தாராளமாக ஏற்றலாம். அவர்கள் வீட்டில்குடும்பத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என யார் வேண்டுமானாலும் தீபம் ஏற்றலாம் 

எந்த நாட்களில் விளக்கை சுத்தம் செய்ய வேண்டும் ?

வெள்ளி, செவ்வாய் தவிர மற்ற நாட்களில் விளக்கை சுத்தம் செய்யலாம். முதல் நாள் விளக்கேற்றி விட்டு அடுத்த நாள் திரி நுனியில் கருகி இருக்கும். அதை மட்டும் நீக்கி விட்டு, மீண்டும் அதே திரியை பயன்படுத்தி விளக்கேற்றலாம். புது திரி மாற்ற வேண்டிய அவசியமில்லை. 

விளக்கேற்றுவதில் எதெல்லாம் செய்யக் கூடாது?

ஒரு விளக்கிற்கு பயன்படுத்திய எண்ணெய்யை மற்றொரு விளக்கிற்கோ அல்லது பயன்படுத்திய எண்ணெய்யை கொண்டு, விளக்கை சுத்தம் செய்து விட்டு மீண்டும் பயன்படுத்தக் கூடாது. ஒரு விளக்கில் எண்ணெய் ஊற்றி, இரண்டு நாட்கள் எரிந்த பிறகு, அந்த விளக்கை சுத்தம் செய்ய வேண்டுமானால் ஏற்கனவே அதில் பயன்படுத்திய எண்ணெய்யை கீழே ஊற்றி விட வேண்டும். விளக்கை சுத்தம் செய்த பிறகு புதிதாக எண்ணெய் ஊற்றி, திரி போட்டு தான் மீண்டும் விளக்கேற்ற வேண்டும்.


வீட்டில் பூஜை அறையில் எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்

 என்பதற்கு குறிப்பிட்ட விதி இல்லை, ஆனால்  இது தவிர, உங்களின் வசதிக்கேற்பவும், பூஜை அறையில் உள்ள தெய்வங்களின் எண்ணிக்கையைப் பொறுத்தும் ஒற்றைப்படை எண்ணிக்கையில் விளக்குகளை ஏற்றலாம். 







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

​ஆடி அமாவாசை விரதம் / சித்ரா பௌர்ணமி விரதம் ::

வீட்டில் இறந்தவர்களின் படங்களை எப்படி வைத்து வழிபட வேண்டும்?

பித்ரு தோஷம்