வீட்டில் இறந்தவர்களின் படங்களை எப்படி வைத்து வழிபட வேண்டும்?
வீட்டில் இறந்தவர்களின் படங்களை எப்படி எந்த திசையில் வைத்து வழிபட வேண்டும்?
இறந்தவர்களின் படம் என்பது இறந்தவர்களின் புகைப்படத்தைக் குறிக்கும்.
இறந்தவர்களின் படங்கள் பொதுவாக வீடுகளில் வைக்கப்படுகின்றன, குறிப்பாக கடவுள்களை வழிபடுவதை போன்று நமக்கு முன்பு வாழ்ந்து மறைந்த முன்னோர்களை வழிபடும் பழக்கம் நம்மிடம் உண்டு.
உங்களது வீட்டில் எந்த இடத்தில் வேண்டும் என்றாலும் எந்த திசையில் என்றாலும் இறந்தவர்களின் படத்தை மாற்றிக் கொள்ளலாம். அதில் எந்த ஒரு தவறும் இல்லை. ஆனால் பூஜை அறையில் தெய்வபடங்களின் கீழே மாற்றிக் கொள்ளலாம். பூஜை அறையில் கீழே படத்தை வைத்து வழிபட்டால் அதிக நன்மைகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வீட்டில் இறந்தவர்களின் படங்களை வைக்கும்போது, சில விஷயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
அவை:
படங்களை எங்கு வைக்கக்கூடாது *படங்களை படுக்கையறை அல்லது தெய்வங்களின் படங்களுடன் சேர்த்து வைக்கக்கூடாது.
படங்களை எங்கு வைக்கக்கலாம்
பூஜை அறையில் தெய்வபடங்களின் கீழே வைப்பது நல்லது.அல்லது படுக்கை அறையை தவிர்த்து விட்டு மற்ற எந்த இடத்தில் வேண்டுமானாலும் நமது முன்னோர்களின் படங்களை வைத்து வழிபடலாம்
தினமும் முன்னோர் வழிபாடு எப்படி செய்வது?
தினமும் காலையில் பூஜை அறையில் விளக்கேற்றும் போது முன்னோர்கள் படத்திற்கு முன்பும் தினமும் கீழே விளக்கேற்றி வழிபடுவது சிறந்தது.சுவாமி படங்களுக்கு பூ போடுவது போன்று முன்னோர் படங்களுக்கும் பூ வைத்து வழிபடலாம். சுவாமிக்கு ஏற்றும் ஊதுபத்தியை சுவாமி படங்களுக்கு காட்டிய பிறகு முன்னோர் படங்களுக்கும் காட்டி வழிபடலாம். தினமும் பூ போட முடியா விட்டாலும், தினமும் விளக்கேற்றி வழிபடுவது சிறந்தது.
இறந்தவர்களின் படங்கள் அவர்களின் நினைவாக மேலும் அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெற வழிபடப்படுகின்றன.
இறந்தவர்களுக்கு யார் பூஜை செய்யலாம் ?
இறந்தவர்களின் படங்களுக்கு அவர்கள் குடும்பத்தை சேர்ந்த, உரிமை உடைய யார் வேண்டுமானாலும் பூஜை செய்து வழிபாடு செய்யலாம்.
சிலர் இறந்தவர்களை வழிபட கூடாது என்கிறார்கள் ஏன் அப்படி?
என் நிலைப்பாடு அப்படி அல்ல இது தொடர்பாக சில தகவல்களை பார்க்கலாம்.
திருவண்ணாமலை, ரமண மகரிஷி அவர்கள் தன்னுடைய தாய்க்கு முக்தி அளித்தார்கள்.
ரமண மகரிஷி அவர்களின் தாயின் பூதவுடலை எரியூட்டாமல், புதைத்து அதன் மேல் ஒரு சிவலிங்கம் அமைத்து, சமாதி கோவிலாக இன்றளவும் வழிபடப்பட்டு வருகிறது.
கோவில் பெயர்
• மாத்ரு பூதேஸ்வரர் ஆலயம்.
திருவண்ணாமலை, ரமணாஸ்ரமம் வளாகத்திலேயே இருக்கிறது.
இது ஒரு சின்ன உதாரணம் தான் இது போல பல ஆன்மிக நபர்கள் முக்தி அடைந்தபின் அவர்களது, பூதவுடலை சமாதி செய்விக்கப் பெற்று அதன் மேலே சிவலிங்கப் பிரதிஷ்டை செய்யப்பட்டு கோவிலாக வழிபடப்பட்டு வருகிறது.
• பிராண சக்தி அடிப்படையில் இவ்வாறாக ஆன்மிகமாக முக்தி அடைந்தவர்களின் புகைப்படங்களையோ அல்லது சமாதியான இடமோ நேர்மறை பிராண சக்தி [ positive ] அதிர்வை ஏற்படுத்தும்.
• சாதாரண உலக வாழ்க்கையை மேற்கொண்டு மரணம் அடைந்தவர்களின் பூத உடல் புதைக்கப்பட்ட இடமோ அல்லது அவர்களது புகைப்படங்களிலோ எதிர்மறை பிராண சக்தி [ negative ] அதிர்வை ஏற்படுத்தும்.
நான் கூறிய பிராண சக்தியின் வேறுபாட்டை,
• உள்ளுணர்வின் மூலமாக சுயமாக அறிய முடியும்.
• ருத்ராட்ச மணி மாலை மூலமாக சோதித்து பிராணசக்தி வித்தியாசத்தை அறிய முடியும்.
எங்கள் வீட்டில் எனது தாய் தந்தையரின் எங்கள் வழக்கப்படி இன்றளவும் அவர்களின் வருடாவருடம் திதிநாள்ல் அவர்களை வழிபடுவது வழக்கம்.ஆக அவர்களின் வழிபடுவதில் எனக்கு சிக்கலில்லை.
எனக்கும் என்குடும்ப உறுப்பினர்கும் அவர்களின்நேர்மறை பிராண சக்தி [ positive ] அதிர்வை ஏற்படுத்தும்.
முன்னரே கூறியது போல இறந்தவர்கள் ஆன்மிகமாக உடலை உதறாமல் அல்லது முக்தி அடையாமல், சாதாரணமாக இறந்திருந்தால் , அல்லது திதிநாள்ல் வழிபடமாமல் அவர்கள் புகைப்படத்தில் இருந்த எதிர்மறை பிராணசக்தி அதிர்வு வெளிப்படும்.
அது பொதுவாக நமக்கு பலவிதங்களில் உகந்தது அல்ல.
அவர்களின் புகைப்படங்களை பூஜை அறையிலோ அல்லது வேறு வகையிலோ வைத்தால் எதிர்மறை பிராணசக்தி அதிர்வை அவர்களுடைய புகைப்படங்கள் ஏற்படுத்தும்.
என் நிலைப்பாடு பூஜை அறையில் இறந்தவர்களை வைத்து வழிபடுவதில் சிக்கலில்லை.
பூஜை அறையில் இறந்த குடும்ப உறுப்பினர்களின் படங்களை வைப்பது என்பது, பொது மரபாக பின்பற்றப் படுவதில்லை. அவ்வாறு வைப்பதால் தவறொன்றுமில்லை. நிச்சயமாக இறைவன் அதைப்பற்றி 'கருத்து' எதுவும் கூறப்போவதில்லை; தண்டிக்கப் போவதில்லை!
இறந்தவர்களை வணங்குவது நல்ல செயலா?
நம்மைப்பெற்று வளர்த்து ஆளாக்கியவர்களையும் நமது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்களையும் வாழ்வின் முக்கியமான தருணத்தில் நமக்கு உதவி செய்தவர்களையும் அவர்கள் இறந்திருந்தாலும் வாழ்ந்துகொண்டிருந்தாலும் வணங்குவது மிகவும் நல்ல செயலே! இறந்தவர்களின் நன்றிக்கடனை இவ்வாறாவது கழிக்கமுடியுமா…..தெரியவில்லை!..
இறந்த மகன் / மகளின் படத்தை வைத்து தந்தை வணங்கலாமா?
ஒருவரை தெய்வமாக எப்போது வேண்டுமானாலும் நினைக்கலாம் இதில் தவறு ஏதுமில்லை அவர் வயது குறைந்தவராக முடிந்தவரை என்பதில்லை ஒருவருக்கு பிடித்தவரை எப்படி மனதார மதிக்கிறோம். அதேபோல்தான் எண்ணமும் இதில் தவறில்லை.
படம் வைத்து வணங்கலாம் என்பது அவரவர் மனநிலை பொறுத்து.மனதிற்கு சரி என்று பட்டால் சரியே.

கருத்துகள்