மறைந்த முன்னோர்களுக்கு வருஷ திதி, (திவசம்) தர்ப்பணம்
திதி கடைப்பிடிப்பது என்றால் என்ன?
முன்னோர்களை, தகப்பனார்/தாயார் இறந்த திதியை வியாஜமாகக்கொண்டு நன்றியுடன் நினைவுகூறல். அதன் பொருட்டு படையல் போடபடும் பின்னர் குடும்பத்தினர் விருந்துபசாரத்தில் கலந்து கொள்வர்.
ஏன் கடைப்பிடிக்கிறார்கள்?
காரணம், நன்றியுணர்ச்சியை மனத்தே இருக்கச்செய்து நம்மைப் பண்படுத்தவே.
இறந்தவருடைய வருடாந்திர திதி ஒரு குறிப்பிட்ட நாளில்/திதியில் கொடுக்க முடியாத போது என்ன செய்வது?
ஏன் கொடுக்க முடியாது மணமிருந்தால் மார்க்கம் உண்டு.
அதேநாளில் தான் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது.
மறைந்த முன்னோர்களுக்கு நாம் செய்யும் சிரார்த்தங்களும், தர்ப்பணங்களும் நமது குடும்பத் தினரின் நன்மைக்காவே செய்யப்படுகிறது. அகவே தவறாது சிரார்த்தத்தையும் தர்ப்பணங்களையும் செய்ய வேண்டும்.
உத்தமமான நாள் என்பது தாய் தந்தையருக்கு சிரார்த்தம் செய்ய வேண்டி நாள்தான்.
அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரப்படவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றமடைந்து வருத்தப்பட்டு கோபத்தோடு செல்கிறார்கள் என்றும், ஒரு சில பித்ருக்கள் சாபம் கூட தந்து விட்டுச் செல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
மறைந்த முன்னோர்களுக்கு நாம் செய்யும் சிரார்த்தங்களும், தர்ப்பணங்களும் நமது குடும்பத் தினரின் நன்மைக்காவே செய்யப்படுகிறது. அகவே தவறாது சிரார்த்தத்தையும் தர்ப்பணங்களையும் செய்ய வேண்டும்.
இறந்தவருடைய வருடாந்திர திதி ஒரு குறிப்பிட்ட நாளில்/திதியில் கொடுக்க முடியாத போது என்ன செய்வது?
பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள்
ஒரு வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் 96 தொன்னூற்று ஆறு நாட்கள்.
இவைகளில் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்
14 மன்வாதி நாட்கள்,
4 யுகாதி நாட்கள்,
12 மாதப்பிறப்பு நாட்கள்
12அமாவாசை ,
16 மஹாளய பட்சம் ,
12 வ்யதீபாதம்
14 வைத்ருதி ,
4அஷ்டகா ,
4அன்வஷ்டகா ,
4 பூர்வேத்யு ,
இந்த நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.ஆனால்
இந்த 96 நாட்களை விட, மிக மிக உத்தமமான நாள் என்பது தாய் தந்தை இறந்த வருடாந்திரதிததியில் செய்யப்படும் சிரார்த்தம் .
வருடாந்திர திதியில் நாள்தான் பித்ருக்கள்மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
தாய் தந்தையருக்கு சிரார்த் தத்தை எக்காரணம் கொண்டும் செய்யாமல் விட்டு விடக் கூடாது.
ஒருவன் தனது தாய் தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல் எனக்குச் செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை என விஷ்ணுவும் சிவனும் கூறியுள்ளனர். இறந்தவருக்கு வருஷம் ஒரு முறையாவது சிரார்த்தத்தைச் செய்ய வேண்டும். ஏனென்றால் அன்றைய நாளன்று இறந்த ஜீவன் காற்று வடிவில் இறந்தவரின் குழந்தைகள் வாழும் வீட்டின் வாசலில் வந்து அவர்கள் செய்யும் சிராத்தத்தில் தரும் உணவை சாப்பிடுவதற்காக காத்துக் கொண்டிருக்குமாம்.
புத்திரர்கள் சேர்ந்து செய்யலாமா?
குடும்பம் பங்கு பிரிக்கப் பட்டிருந்தாலும், பிரிக்கப்படாமல் தனித்தனியாக குடும்பம் நடத்திக் கொண்டிருந்தாலும் தனித்தே சிரார்த்தம் செய்ய வேண்டும். எல்லோரும் ஒரே குடும்பமாக இருந்தால் தனித் தனி சிரார்த்தம் தேவையில்லை. தனித்தனியே வாழ்ந்து கொண்டு சிரார்த்தத் தினத்தன்று ஒன்று சேர்ந்து ஒரே சிரார்தமாக இருந்தால் அது ஏற்புடையதல்ல.
மூத்தவர் பண்ணினால் அவரருகில் இருந்தால் போதும் என்பது எப்போதும் சேர்ந்து இருப்பவர் களுக்கு மட்டுமே. [தாயார் உயிருடனிருந்தால் அவன் இருக்கு மிடத்தில் பித்ருசிரார்த்தம் எல்லோரும் சேர்ந்து செய்வதில் தவறில்லை என்பது பெரியோர்களது வாக்கு].
தனித்தனியே சிரார்த்தம் செய்வதால்,பித்ருக்களுக்கு அதிக திருப்தி.பித்ருக்கள் பல இடங்களிலும் ஒரே சமயத்தில் இருக்க முடியும்.சிரார்த்ததில் பலவற்றிற்கு மாற்று உண்டு. ஆனால் சிரத்தைக்கு மட்டும் மாற்றம் இல்லை. தெய்வ காரியங்களை முன்பே குறிப்பிட்ட மாதிரி சில நேரங்களில் தள்ளி வைத்து, பிறகு செய்ய சட்டத்தில் இடமுண்டு.
ஆனால், சிரார்த்த காரியங்களை தள்ளி வைக்கவோ அசிரத்தையாகச் செய்ய இடமில்லை. பூரண ஈடுபாட்டுடன் அவசரமின்றி செய்ய வேண்டும். முறைப்படி செய்ய இயலாவிடில் சக்தியுள்ள மட்டும் சிரத்தையுடன் செய்ய சாஸ்திரம் அனுமதிக்கின்றது. எல்லாவற்றிற்கும் பிரதிநிதி உண்டு. சிரத்தைக்கு பிரதிநிதி இல்லை.
சிரார்த்தத்தன்று சமாராதனை?
சிரார்த்த திதி அன்று நாங்கள் வருஷா வருஷம் அன்னதானத்திற்கு [அல்லது ஏதவது பாட சாலைக்கு] ஏற்பாடு செய்து மொத்தமாகப் பணம் கட்டி விட்டோம். அதனால் சிரார்த்தம் செய்வதில்லை என்று கூறுபவர் களும் நமது கண்ணில் படத்தான் செய்கிறார்கள்.இது சுத்த அபத்தம். அன்னதானம் செய்த பலன் வேண்டுமானால் தனியாகக் கிடைக்கலாம். [சிரார்த்தத்தன்று பித்ருக்களை வரித்து அல்லா மல் மற்றவர்களுக்குப் போஜனம் செய்விக்கலாமா என்பதே ஒரு கேள்விக்குறி எது எப்படி இருந்தாலும், சிரார்த்தத்திற்குப் பிரதிநிதியாக அன்னதானம் ஆகாது. சிரார்த்தம் சிரார்த்தம் தான். பிரச்சனை ஏதும் இல்லாதவர்களும் வசதி உள்ளவர் களும் முறையாக சிரார்த்தத்தை அனுஷ்டித்துத்தான் ஆக வேண்டும்.
வீட்டில் கொடுப்பது எப்படி?
சிரார்த்த விழாவிற்கு ஒரு நாளுக்கு முன்பாக ஒருவர் அசைவ உணவை சாப்பிடக்கூடாது, ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே சாப்பிட வேண்டும்.
சிரார்த்த திதியன்று வீட்டில் முதலில் தர்ப்பணம் கொடுத்த பிறகே வழக்கமான பூஜைகளை மேற்கொள்ள வேண்டும். தர்ப்பணத்திற்குரிய பொருட்களை வைத்துக் கொண்டு பூஜை செய்யக் கூடாது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற அடிப்படையில் தாய், தந்தைக்கு செய்ய வேண்டிய பித்ரு கடமைகளை நிறைவேற்றிய பிறகே தெய்வத்திற்கான பூஜையை மேற்கொள்ள வேண்டும்.
சிரார்த்த திதியன்று வீட்டில் இருக்கும் அனைவரும் சாப்பிடாமல் இருக்க வேண்டுமா?
யார் தர்ப்பணம் கொடுக்கிறாரோ அவர் மட்டும் உபவாசம் இருக்க வேண்டும். மற்றவர்கள் சாப்பிடலாம். கணவர் தர்ப்பணம் கொடுப்பதாக இருந்தால், மனைவி சாப்பிடாமல் இருக்க வேண்டும் மனைவி சாப்பிடாமல் படையலுக்கான உணவிவை தயார் செய்யவேண்டும்.(மனைவி பதிவிரதை விரதம் இருக்க வேண்டும்)
சிரார்த்த திதி நாளில் வீட்டில் இருப்பவர்கள் தலைக்கு குளிக்கலாமா?
வீட்டில் உள்ள அனைவரும் சிரார்த்த திதி நாளில் தலைக்கு குளிக்க வேண்டும். ஆனால் எண்ணெய் வைத்து குளிக்க கூடாது. காலையிலேயே அனைவரும் குளித்து முடித்த பிறகு தர்ப்பணம் கொடுக்கும் வேலைகளை துவக்கலாம்.
வீட்டில் என்ன என்ன செய்ய எப்படி கொடுக்க வேண்டும்?
எத்தனை பூஜைகள் செய்தாலும், பித்ருக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளைச் செய்யாவிடில் அது பலனை தராது.
சிராத்தப் பண்டங்ககள்
உளுந்து, முப்பழம், காய், கிழங்கு, செந்நெல், வெல்லம், கோதுமை, நவதானியம், எள், பசும்பால், பாகற்காய், பலாக்காய், மாங்காய், மாதுளம் பழம், கறிவேப்பிலை, எலுமிச்சை, வாழைக்காய், திராட்சை, மிளகு, தேன், நெய், கண்டங்கத்திரி, கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சேனைக்கிழங்கு, சீரகம், ஏலம், அவரை, பிரண்டை, தூதுவளை, இஞ்சி, வாழைத்தண்டு, பசுந்தயிர், வள்ளிக்கிழங்கு போன்றவை சிராத்தப் பண்டங்களாகும்.
இவற்றுடன் உங்கள் மூன்று தலைமுறை(இறந்த) மூதாதையர்கள் பெயர்கள். அத்துடன் இறந்தவர்(திவசம்) திதி.
தர்ப்பணம் செய்யத் தேவையான பொருட்கள்:
பிண்டம் செய்வதற்கு:
ஊறவைத்து, அரைத்த உழுந்து மாவு - தேவையான அளவு
ஊறவைத்து அரைத்த அரிசிமாவு தேவையான அளவு
கறுப்பு எள்ளு
சக்கரை/நாட்டுச்சக்கரை
கதளி வாழைப்பழம் - 1 ,
பழங்கள்
தயிர்
திதிசெய்வதற்கு
பூமாலை
கறுப்பு எள்ளு
ஊதுபத்தி
கற்பூரம்
வாழை இலை. தலை வாழை உட்பட
தேங்காய்
மஞ்சள்
அறுகம்புல்
நிறைகுடம்
பொங்கல் அரிசி
பூநூல் - வெள்ளை நூல்
சில்லறை காசு
வெற்றிலை
பாக்கு/சீவல்
படைப்பதற்கு பழங்கள்
பால்
சந்தணம்
குங்குமம்
வீபூதி
என்ன என்ன சாமான்கள் வைத்து படையல் போட வேண்டும்?
படையலுக்கு வேண்டிய பொருட்கள்:
சமைத்த உணவு,
பலகாரங்கள்
பொங்கல்
பாயாசம்
படைப்பதற்கு பழங்கள்
அய்யர் தானத்திற்கு கொடுக்க வேண்டிய பொருட்கள், & தட்சனை
தானத்திற்கு
அரப்பு சிறிதளவு
நல்லெண்ணெய் 250ml
இஞ்சி
தேசிக்காய்/எலுமிச்சை
சாப்பாட்டு அரிசி
காய்கறிகள் - பாகற்காய் உட்பட
பழப்புளி
பருப்பு
மிளகாய்த் தூள்/மசாலாத் தூள்
வஸ்திரம்(வேட்டி, அத்துடன் விரும்பினால் சேலை)
தட்சனையாக கொடுக்க வேண்டிய காசு
1. வீட்டில் பசியால் வாடும் தனது வயதான பெற்றோர்களுக்கு சாப்பாடு கொடுக்காமல் தெய்வத்திற்கு சர்க்கரைப் பொங்கல் போன்ற பொருட்களை நிவேதனம் செய்வதாலும் ஆடை இன்றி பெற்றோர்கள் கஷ்டப்படும் போது தெய்வங்களுக்கு பட்டு வஸ்திரங்களை அணிவிப்பதாலும் எந்த பலனும் கிடைக்காது. பித்ருதோஷம்தான் ஏற்படும்.
2. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் தர்ப்பணம் நடைபெறும் நாளுக்கு முன்பாக தர்ப்பணம் செய்பவர் தனது வீட்டில் தினசரி தெய்வங்களுக்கு செய்யும் பூஜையைத் தவிர வேறு எந்த ஒரு விசேஷமான பூஜைகளையோ ஹோமத்தையோ செய்யக் கூடாது.
3. தர்ப்பணம் செய்ய வேண்டிய மாதத்தில் சிரார்த்தம் செய்யும் முன்பாக தங்கள் வீட்டு மங்கள நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.
4. தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடை பெறும் எந்த ஒரு பூஜைகளிலும் ஹோமங்களிலும், ஆலய நிகழ்ச்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக் கூடாது.
5. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து மூடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை நிறுத்தி வைத்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமான பூஜைகளைச் செய்ய வேண்டும்.
பார்வணசிரார்த்தம்
முறையாக உணவு செய்து வைத்து, ஹோமம், பிண்டதானம் செய்து, நடத்தப்படும் சிரார்த்தத்துக்கு பார்வணசிரார்த்தம் என்று பெயர்.
சங்கல்ப சிரார்த்தம்
ஹோமம் பிண்டதானம் போன்ற சில காரியங்கள் இல்லாமல், உணவு மட்டும் வைத்து செய்யப்படும் சிரார்த்தம் சங்கல்ப சிரார்த்தம் எனப்படும்.
ஆம சிரார்த்தம்
ஒருவருக்கு சாப்பாடு போட என்னென்ன பொருட்கள் தேவையோ அரிசி காய்கறிகள், பருப்பு போன்ற பொருட்கள் அனைத்தையும், சமைக்காமல் அப்படியே தட்சணையுடன் அளித்துச் செய்யும் சிரார்த்தம் ஆம சிரார்த்தம் எனப்படும்.
ஹிரண்ய சிராத்தம்
சிரார்த்தம் செய்தால் எவ்வளவு பணம் செலவாகுமோ அந்த பணத்தை நான்கு மடங்கு அதிகமாக்கி தட்சணையாக தந்து செய்வது ஹிரண்ய சிராத்தம் எனப்படும்.
முன்னோர்களுக்கு திதி கொடுக்க உங்கள் வீட்டு வழக்க முறையை பின்பற்றுவது நல்லது
சிரார்த்தம் செய்ய எந்த ஒரு வசதியும் இல்லாதவர்கள் கருப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணமாக செய்யலாம்.
சிரார்த்தம் நடத்தப்படும் இடம், சிராத்தம் செய்யும் நேரம், சிரார்த்தத்தில் பித்ருக்களாக பாவித்து பூஜிக்கப்படும் நபர், சிரார்த்தத்தில் உபயோகிக்கும் பொருட்கள், சிராத்தம் செய்யும் நபர் ஆகியவை சிரார்த்தத்துக்கு முக்கியமானவை. இவைகள் தூய்மையானவைகளாக இருந்தால் சிரார்த்தத்தின் முழுமையான பலன்கள் கிடைக்கும்.
பித்ருக்களை சிரார்த்தம் செய்ய வேண்டிய நாளன்று முறையாக ஹோமம் செய்து சாப்பாடு போட்டு சிரார்த்தம் செய்து அவர்களுக்கு உணவளித்து, அவர்களை திருப்தி செய்தால் அவர்கள் அவர்களது குடும்பத்தினருக்கு நீண்ட ஆயுள், அழியாப்புகழ், உடல் வலிமை, செல்வம், பசுக்கள், சுகம், தானியங்கள் ஆகியவற்றை தருகிறார்கள்.
நமது பித்ருக்களிடத்தில் சிரார்த்தத்தை சிரத்தையுடன் செய்வதாகவும், நல்ல உயர்ந்த ஆடை, தீர்த்த பாத்திரம் சிரார்த்தத்தில் வாங்கி த்தருவதாகவும், பிரார்த்தனை செய்து கொண்டு அவ்வாறே சிரார்த்தத்தை நடத்தினால் நிச்சயம் உங்கள் விருப்பம் நிறைவேறும். விரும்பிய பலன் கைகூடும்.
ஒரே நாளில் ஏராளமான பித்ருக்களுக்கு தனித்தனியாக பல பேர் சிராத்தம் செய்யும்போது சிரார்த்த உணவு அவரவர்களின் பித்ருக்களுக்கு எவ்வாறு சரியான முறையில் சென்றடைகிறது என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படும். இதை கருத்தில் கொண்டுதான் மறைந்த முன்னோர்களின் கோத்ரத்தையும் பெயரையும் தர்ப்பணம் செய்யும்போது சொல்கிறார்கள். இதனால் ஒருவர் கொடுக்கும் தர்ப்பணம் அவரவர்களுக்கு சரியாகச் சென்றடையும்.
பெற்றோர்களின் வருஷ சிரார்த்தமும் மாதப்பிறப்பும் சேர்ந்தால் மாதப்பிறப்பை முதலில் செய்து விட்டு பிறகு பெற்றோர்களின் வருஷ சிரார்த் தத்தைச் செய்ய வேண்டும்.
அமாவாசையும் மஹாளயமும் ஒரே நாளில் வந்தால் முதலில் அமாவாசை தின தர்ப்பண பூஜைகளை செய்து விட்டு பிறகு மஹாளயத்தை செய்ய வேண்டும்.
பெற்றோர்களின் வருஷாந்தர சிரார்த்தமும் மன்வாதி அல்லது யுகாதியும் ஒன்று சேர்ந்தால் முதலில் மன்வாதி அல்லது யுகாதி தர்ப்பணங்கள் செய்து விட்டு பிறகு பெற்றோர்களின் வருஷ சிரார்த்தத்தைச் செய்ய வேண்டும்.
தாய் தந்தை இருவரில் ஒருவருக்கு மாஸிகமும் மற்றொருவருக்கு வருஷாந்திர சிரார்த்தமும் ஒரே நாளில் நேர்ந்தால், முதலில் வருஷசிராத்தம் செய்து விட்டு பிறகு மாஸிகத்தை செய்ய வேண்டும்.
தாய் தந்தை இருவருக்கும் ஆண்டு தோறும் செய்யும் சிரார்த்தம் ஒரே நாளில் வந்தால் முதலில் தந்தைக்கு சிரார்த்தம் செய்ய வேண்டும். பிறகு தாய்க்கு அதே நாளில் சிராத்தம் செய்ய வேண்டும்.
பெற்றோர் இறந்த மாதம் பட்ச திதியன்று உறவினர்களின் இறப்புத்தீட்டு அல்லது உறவினர்களுக்குக் குழந்தை பிறந்த தீட்டு ஏற்பட்டு விட்டால், தீட்டு எப்போது முடிவடைகிறதோ அன்று பிராயசித்தம் செய்தல் வேண்டும். பிறகு விட்டுப்போன சிராத்தத்தைச் செய்ய வேண்டும்.
இறைவனின் ரூபமான தேவதைகளை விட பித்ருக்கள் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவர்கள். எனவே முதலில் உங்கள் மறைந்த முன்னோர் வழிபாட்டை பிரதானமாக நடத்துங்கள்.
சிரார்த்தம், தர்ப்பணம் செய்யாதவன் சண்டாளனாகப் பிறப்பான் என்று புரா ணங்களில் கூறப்பட்டுள்ளது.
உடல் நிலை சரியில்லா தவர்கள் அருகில் யாரையாவது உதவிக்கு வைத்துக் கொண்டு சிரார்த்தம் செய்ய வேண்டும்.
நம்மைவிட்டு பிரிந்த நம் பித்ருக்கள் அனைவரும் சக்தி நிறைந்தவர்கள். அவர்கள் ஆசீர்வாதத்தினால் கோடி கோடியாக புண்ணியமும், செல்வமும் நமக்கு கிடைக்கும்.
பித்ரு வர்க்கம், மாத்ரு வர்க்கம், பித்ரு காருணீக வர்க்கம் என்று பித்ருக்கள் மூன்று வகைப்படுத் தப்பட்டுள்ளார்கள். அதாவது அப்பா வகையை சார்ந்த பித்ருக்கள் பித்ருவர்க்கம் எனப்படுவார்கள். அம்மா வகையை சார்ந்த பித்ருக்கள் மாத்ருவர்க்கம் எனப்படுவார்கள். சித்தப்பா, மாமா, குரு, நண்பர்கள் காருணீகவர்க்கம் எனப்படுவார்கள். இவர்களை நினைவு கூறி தர்ப்பணங்களை செய்ய வேண்டும்.
மக்களுக்கு தொண்டாற்றி, சுயநலமின்றி அரிய இறைப்பணிகளைப் புரிந்தோர் மட்டுமே பித்ருலோகம் அடைகின்றனர் என்பதை கருடபுராணம் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது.
கார்த்திகை மாதம் உத்திராயண புண்ணியகாலம் சுக்ல பட்சம், பவுர்ணமி திதியில் தானம் செய்ய வேண்டும். கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) துவாதசி திதியில் தானங்கள் அளிக்கலாம்.
எள், உப்பு, பொன், பருத்தி ஆடை, இரும்பு ஆகியவற்றை தானம் அளிப்பது மிகவும் நல்லது. தானம் பெற வருபவரை மிகுந்த மரியாதையுடன் நடத்தி தானமளிக்க வேண்டும்.
பித்ருக்கள் எங்கிருந்தாலும் சரி, தத்தம் சந்ததியருடைய நல்வாழ்விற்காகப் பாடுபடுகின்றனர் என்பதில் எள்அளவும் சந்தேகம் கிடையாது.
ஒருவர் மரண படுக்கையில் அவதிப்படும்போது அவரது மகன் அல்லது மகள் மகம் நட்சத்திரத்தன்று அகத்திக்கீரையை எருமை மாட்டிற்கு தானம் அளித்தால் மரண அவதி நீங்கும்.
வீட்டில் வயதானவர்கள் படுக்கையோடு அவதியுற்றால் பாய், தலையணை, படுக்கை விரிப்பு போன்றவற்றை தானம் செய்வது நன்மை அளிக்கும். எள்ளுருண்டை, கடலை உருண்டை போன்றவற்றை அளிப்பது பித்ருக்களின் ஆசியைக் கூட்டும்.
சாஸ்திரப்படி, சிரார்த்த காரியங்கள் செய்பவர் திருமணம் உள்ளிட்ட விழாக்களிலும் மற்றவர் வீடுகளில் உணவு, உண்ணக் கூடாது.
சிரார்த்தம் செய்யக்கூடியவர் முதல் நாள் முகச்சவரம் செய்யக்கூடாது. எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது, மனைவியுடன் சேர்ந்து உறங்கக் கூடாது, வெற்றிலை தாம்பூலம் போடுவதும் கூடாது.
மங்கள நிகழ்ச்சிகள் நம் வீட்டில் நடக்கும் பொழுது முதலில் பித்ருக்களின் ஆசியை நாம் முழுமையாக பெற வேண்டும். இது மிக, மிக முக்கியம்.
துவாதசி பன்னிரெண்டாம் நாளன்று பித்ரு பூஜை செய்பவன் சொர்ண லாபம் பெறுவான்.
திரயோதசி பதிமூன்றாம் நாளன்று பித்ரு காரியங்களை சரிவர நடத்துபவனுக்கு அறிவு, ஞான சக்தி, பசுக்கள் தேக ஆரோக்கியம், சுதந்திரத்தன்மை, சிறந்த விருத்தி, தீர்க்கமான ஆயுள் பலம், ஐஸ்வர்யம், அனைத்து பலன்களும் தவறாமல் கிடைக்கும்.
சதுர்த்தசி அன்று பித்ரு வழிப்பாட்டை சிறப்பாக செய்பவர்களுக்கு அவர்களுடைய பித்ருக்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டு இறந்திருந்தால் திருப்தி அடைவார்கள்.
தாய், தந்தையின் இறந்த திதிகளை மட்டும் நினைவு கொண்டு இறந்த முன்னோர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து தர்ப்பண காரியங்கள் செய்தால் அதுதான் குடும்பத்தில்முழு பலன்களையும் தரவல்லது.
குடும்பத்தில் சன்னியாசம் வாங்கிச் சென்றவர்களுக்கு துவாதசி அன்று மஹாளய சிரார்த்தம் செய்வது மிக முக்கியம்.

கருத்துகள்